விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உடுத்துக்*  களைந்த நின் பீதக ஆடை உடுத்து கலத்தது உண்டு* 
    தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன*  சூடும் இத்தொண்டர்களோம்*
    விடுத்த திசைக் கருமம் திருத்தித்*  திருவோணத் திருவிழவில்* 
    படுத்த பைந் நாகனைப் பள்ளி கொண்டானுக்குப்*  பல்லாண்டு கூறுதுமே       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உடுத்து - தேவரீர் அரையில் சாத்திக்கொண்டு;
களைந்த - கழித்துவிட்ட;
நின் பீதகவாடை - தேவரீருடைய பீதாம்பரத்தை;
உடுத்து - உடுத்துக்கொண்டும்;
கலத்தது - தேவர் அமுதுசெய்த பாத்திரத்தில் மிகுந்திருப்பதை;

விளக்க உரை

அனன்யப்பிரயோஜனர்கள் எம்பெருமானை நோக்கிப் பல்லாண்டு பாடுவதாக அமைந்த பாசுரம் ஆகும். தேவரீர் உடுத்துக் களைந்த பீதாம்பரத்தை உடுத்துக் கொண்டும், தேவரீர் அமுது செய்து மிகுந்திருப்பதை உண்டும், தேவரீர் சூடிக் களைந்த திருத்துழாய் மாலைகளை சூடியும் வாழும் தாசர்களான அடியோம், தேவரீர் ஏவி அனுப்பிய திசைகளில் முறையாக காரியங்களைச் செய்து பாம்பாகிய படுக்கையிலே சயனத்திருக்கிற தேவரீருக்கு ஸ்ரவண நன்னாளிலே பல்லாண்டு பாடுவோம்.

English Translation

O Lord reclining on the hooded snake, we wear the yellow vestments you wear and discard. We eat the food offered to you. We wear the woven Tulasi flowers you wear and discard, and rejoice. Keeping watch over the ways of the world, you appeared in the asterism of Saravanam. To you we sing Pallandu.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்