விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

     
    கன்னற் குடம் திறந்தால் ஒத்து ஊறிக்*  கணகண சிரித்து உவந்து* 
    முன் வந்து நின்று முத்தம் தரும்*  என் முகில்வண்ணன் திருமார்வன்* 
    தன்னைப் பெற்றேற்குத் தன்வாய் அமுதம் தந்து* என்னைத் தளிர்ப்பிக்கின்றான்*
    தன் எற்று மாற்றலர் தலைகள் மீதே*  தளர்நடை நடவானோ    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கன்னல் குடம் - கருப்பஞ்சாறு நிறைந்த குடம்
திறந்தால் - பொள்ளல் வி்ட்டால் (அப்பொள்ளல் வழியாகச் சாறுபொசிவதை)
ஒத்து - போன்று
ஊறி - (வாயில் நின்றும் நீர்) சுரந்து வடிய
கணகண - கணகணவென்று சப்தமுண்டாகும்படி சிரித்து

விளக்க உரை

உரை:1

தன் வாயில் நின்றும் கரும்பு ரஸம்போல் இனிமையான நீர் வெளிப்பட்டு வடியும்படி சிரித்துக்கொண்டு வந்து எனக்கு முத்தங் கொடுக்கும் தன்மையுள்ளவன் கண்ணனென்பது – முன்னிரண்டடிகளின் கருத்து. கணகண – வாய்விட்டுச் சிரிக்கும்போது உண்டாகின்ற ஒலிக்குறிப்பு. இவன் நடக்கிற நடையழகுகண்டே சத்ருக்கள் சாகவேணுமென்பது ஈற்றடியி்ன் கருத்து.

உரை:2

கருப்பஞ்சாறு நிறைந்த குடத்திலிருந்து சிந்துகின்ற தித்திக்கும் சாறினைப் போன்று, எம்பெருமானின் பவளவாயிலிருந்து ஊறுகின்ற அமுதவூறலானது அவன் செவ்வாய்க் கடந்து வெளியே வழிகின்றது.மேனியோ கார்முகில் வண்ணம்! அவனின் சிவந்த திருவாயிலிருந்து வாயமுதம் வழிந்தோட, கணகண என்று வெண்கலம் போல் சிரித்துக் கொண்டே, கொஞ்சிக் கொஞ்சி, குழைந்து என் முன்னே வந்து நின்று முத்தம் தருகிறான், என் அருமை மைந்தன், கார்முகில் வண்ணன், கருணை மன்னன்.வடிவாய் அவன் வல மார்பினில் எப்போதும் வீற்றிருக்கும் திருமகள்! திருமகள் உறைகின்ற மார்வன், அதுதான் திருமார்வன்.திருமார்வனைப் பெற்ற எனக்கு, அவனின் திருவாயமுதினைத் தந்து என்னை உயிர்ப்பிக்கிறான்.தன் மேல் பகைமை கொண்டு, தன்னை எதிர்க்கும் பகைவர்களின் தலைகள் மீது தளர்நடை நடந்து வருவாயா!

 

English Translation

My cloud-hued Lord with Sri on his chest comes forward, giggles and gives me a kiss; his spittle, flowing from his mouth like the froth over a can of sugarcane juice, makes me tremble. Is he going to come toddling now, over the heads of those who oppose him?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்