விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான்*  பெரியதோர் இடும்பை பூண்டு*
    உண்டிராக் கிடக்கும் போது*  உடலுக்கே கரைந்து நைந்து,*
    தண்டுழாய் மாலை மார்பன்*  தமர்களாய்ப் பாடி யாடி,* 
    தொண்டு பூண்டமுதம் உண்ணாத்*  தொழும்பர் சோறு உகக்குமாறே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பெண்டிரால் - மனைவியரால்;
சுகங்கள்  -  ஸகல ஸூகங்களையும்;
உய்ப்பான் - அநுபவிப்பதாகக் கருதி;
புண்டு - மேற்கொண்டு;
இரா -  இராப்பொழுதிலே;
 

விளக்க உரை

பெண்களோடு அணைந்து சுகத்தை அநுபவிக்க விரும்பதல் தீயோடு அணைந்து விடாய்தீர நினைப்பதையம், ஆடுகிற பாம்பின் நிழலிலே ஒதுங்கி சுகம் பெற நினைப்பதைய மொக்குமென்பார்- பெண்டிரால் சுகங்களுய்ப்பான் பெரியதோரிடும்பைபண்டு என்கிறார். ஐயோ துக்கத்திற்கு ஸாதமானவற்றையே சுகத்திற்கு ஸாதனமாக நினைப்பதே இப்படியுமொரு மயக்கமுண்டோ பிழைக்கவேணுமென்று நினைப்பாரும் விஷத்தையுண்ப?

English Translation

Lowly ones take birth in misery hoping to enjoy the pleasures of women, and go to sleep after supper, lamenting for their bodies. Become devotees of the Lord of Tulasi-chest, sing and dance in ecstasy, enjoy the nectar of service. Wonder how the others enjoy food?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்