விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திருக்கலந்து சேரும்மார்ப!*  தேவதேவ தேவனே,* 
    இருக்கலந்த வேதநீதி*  ஆகி நின்ற நின்மலா,*
    கருக்கலந்த காளமேக*  மேனிஆய நின்பெயர்,* 
    உருக்கலந்து ஒழிவிலாது*  உரைக்குமாறு உரைசெயே.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நின் மலா - பரிசுத்தனே
கரு கலந்த - பொன்னோடு  சேர்ந்த
காளமேகம் மேனி - காளமேகம்போன்ற திருமேனியையுடைய
ஆய - கண்ணபிரானே!
நின் பெயர் - உன் திருநாமஙக்ளை

விளக்க உரை

ழ்வார் தம்முடைய சரீரபந்தத்தை அறுத்து தந்தருள வேணுமென்று எம் பெருமானைப் பிரார்த்தித்தாலும் அவன் இப்போதே அது செய்யமாட்டானே; இந்த சரீரத்தோடே இவரைச் சிறிது காலம் வைத்து அநுபவிக்க விருப்பமுடையவனாதலால் ‘வேர்சூடுவார் மண்பற்றை உகுக்குமாபோலே’ இந்த ப்ராக்ருத சரீரத்தையே மிகவும் விரும்பியிருப்பவனிறே; அதனால், ‘ஆழ்வீர்! நீர் பிரார்த்திக்கிறபடி சரீரபந்தத்தை இப்போதே அறுத்துத் தர முடியாது; அதற்கு ஒரு காலவிசேஷம் உண்டு; பொறுத்திரும்’ என்ன; அப்படியாகில் தேவரீருடைய மேன்மைக்கும் நீர்மைக்கும் வடிவழகுக்கும் வாசகமான திருநாமங்களையாவது அடியேன் இடைவிடாது அநுஸந்தித்துக் கொண்டிருக்கும்படி அருள்புரிய வேணுமென்று பிரார்த்திக்கிறார். இருக்கு+கலந்த = இருக்கலந்த; “சங்கு - கதை, சங்கதை” போல. மூன்றாமடியில், ஆய! என்பது ‘ஆயன்’ என்பதன் விளி. ஹிரண்யவர்ணையான பிராட்டி சேர்ந்த கரிய திருமேனிக்குக் கருக்கலந்த காளமேகத்தை ஒப்புச் சொல்லிற்று ஒக்கும். கரு- பொன்; மின்னலைச் சொல்லிற்றாகக் கொள்க. கரு என்று சர்ப்பத்தைச் சொல்லிற்றாகவுமாய்; நீர்நிறைந்த காளமேகமென்றபடி. உருக்கலந்து = திருநாம ஸங்கீர்த்தகம் பண்ணும்போது திவ்யமங்கள விக்ரஹாநுபவம் நடைபெறவேண்டுமென்ற ஆசை விளங்கும்.

English Translation

O Lord with Lady-Sri on chest, O Lord of gods, O god of gods! O Lord of spotless hue that is bespoken of in Vedas four! O Lord with hue the dark of cloud and aura of the golden sky! Pray make me prate your name and form without an end for all my life.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்