விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வரம்புஇலாத மாய! மாய!*  வையம்ஏழும் மெய்ம்மையே,* 
    வரம்புஇல் ஊழி ஏத்திலும்*  வரம்புஇலாத கீர்த்தியாய்,*
    வரம்புஇலாத பல்பிறப்பு*  அறுத்துவந்து நின்கழல்,* 
    பொந்துமா திருந்த நீ*  வரம் செய் புண்டரீகனே!   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாய! - ஆச்சரியசக்தியுக்தனே!
வையம் எழும் - ஏழுலகத்திலுமுள்ள ஜனங்களும் (கூடி)
மெய்ம்மையே - மெய்யாகவே
வரம்பு இல் ஊழி - பலபல கற்பகங்கள் வரையிலும்
ஏத்திலும் - தோத்திரம் பண்ணினாலும்

விளக்க உரை

“அஞ்சலென்னவேண்டுமே” என்றும் “இரங்கு அரங்கவாணனே!” என்றும் பொதுப்பட அருளிச்செய்ததை விவரியாநின்றுகொண்டு, “ஸம்ஸாரத்தை வேரறுத்து உன் திருவடிகளிலே பொருந்தும்படியாக அநுக்ரஹம் பண்ணியருளவேணும்” என்று தம்முடைய ப்ராப்யத்தை ஸ்பஷ்டமாகப் பிரார்த்திக்கிறார்.

English Translation

O Wonder-Lord of endless feats, O Lord in all, above, below! O Lord of endless ages praised in yore! Cutting the pall of endless birth, O Lotus-Lord do take to me, and bind me to your holy feet, I pray to you for this alone.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்