விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மட்டுஉலாவு தண்துழாய்*  அலங்கலாய்! பொலன்கழல்,* 
    விட்டு வீழ்வுஇலாத போகம்*  விண்ணில் நண்ணி ஏறினும்,*
    எட்டினோடு இரண்டுஎனும்*  கயிற்றினால் மனந்தனைக்- 
    கட்டி,*  வீடுஇலாது வைத்த காதல்*  இன்பம் ஆகுமே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மட்டு உணவு - தேன் நித்யாயிருக்கபெற்ற
தண் - குளிர்ந்த
துழாய் - திருத்துழாயினால் தொடுக்கப்பட்ட
அலங்கலாய் - திருமாலையை அணிந்துள்ளவனே!
விண்ணில் ஏறி - பரமபதத்திற் சென்று

விளக்க உரை

எட்டினோ டிரண்டெனுங் கயிற்றினால் - எட்டோடு இரண்டு சேர்ந்தால் பத்து; இவ்விடத்தில் பத்து என்கிற எண் விலக்ஷிதமல்ல. ‘பத்துடைபடியவர்க்கெளியலன்” என்றபடி பக்திக்கும் பத்து என்று பேருண்டாதலால் அப்பொருளே இங்கு விவக்ஷிதம். வைத்தகாதலின்பமாகுமே- வைத்தகாதலே இன்பமாகும் என்று அந்வயித்து, உன் திருவடிகளில் வைக்கும் ப்ரேமமானது ஒரு ஸுகத்துக்கு ஸாதகனமாகையன்றிக்கே ஸ்வதன்ஸுகமாயிருக்கமென்றுமாம்.

English Translation

O Lord of nectar-Tulasi wreath, O Lord of lovely lotus-feet! What though the joy that only in high heaven betides the soul, the joy that only Bhakti brings through thinking of you constantly, through binding heart with cords of love is far superior for me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்