விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இன்றுசாதல் நின்றுசாதல்*  அன்றியாரும் வையகத்து,* 
    ஒன்றிநின்று வாழ்தலின்மை*  கண்டும் நீசர் என்கொலோ,*
    அன்று பார அளந்தபாத*  போதை யுன்னி வானின்மேல்,* 
    சென்றுசென்று தேவராய்*  இருக்கிலாத வண்ணமே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நின்று சாதல் - சிலகாலமிருந்து செத்துப் போவதோ
அன்றி - இவ்விரண்டத்தொன்று தவிர
யாரும் - மேன்மக்களான ப்ரஹ்மாதிகளும்
வையகத்து - இந்நிலத்திலே
ஒன்றி நின்று - சிரஞ்சீவியாயிருந்து

விளக்க உரை

கருவிலேயே சிலவுயிர்கள் மாண்டொழிகின்றன; கருவில் நின்றும் கீழே விழுந்தவாறே சிலவுயிர்கள் மாண்டொழிகின்றன; சில காலம் ஜீவித்திருந்து சிலர் மாள்வர்; இப்படியல்லது, என்றைக்கும் அழிவில்லாதவர்களென்று சொல்லும்படியாக இந்நிலத்தில் சிரஞ்ஜீவிகளாயிருப்பார் ஆருமில்லை என்னுமிடத்தைக் கைவிலங்கு நெல்லிக்கனியாக ப்ரத்யக்ஷ்கரித்துவைத்தும், அன்றொருநாள் குணதோஷ நிரூபணம் பண்ணாமல் ஸகலலோகங்களிலுமுண்டான கைல சேதநர் தலையிலும் பொருந்தி முறையையுணர்ந்ததின ஸர்வ ஸுலுபமான திருவடித்தாமரைகளை ஆச்ரயித்து அர்ச்சிராதிமார்க்கத்தாலே சென்று மீட்சியற்ற வைகுந்த மாநகரைக் கிட்டி நிர்யஸூரிகளோடு ஒரு கோவையாயிருப்பதற்கு முயல்வார். ஆரூமில்லையே! இஃது என்ன பாவம்!! என்கிறார். “பாதபோதை யொன்றி” என்றும் பாடமுண்டு.

English Translation

Perhaps today or not today but some day, yes, we all must die. No one here is permanent on Earth, it is a certainty. The Lord who strode the Earth in yore, his lotus feet are company, to those who go and worship him with gods all celestials.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்