விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நிற்பதும் ஊர் வெற்பகத்து*  இருப்பும் விண் கிடப்பதும்,* 
    நற் பெருந்திரைக் கடலுள்*  நானிலாத முன்னெலாம்,*
    அற்புதன் அனந்தசயனன்*  ஆதிபூதன் மாதவன்,* 
    நிற்பதும் இருப்பதும்*  கிடப்பதும் என் நெஞ்சுளே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அற்புதன் - (ஞானம் சக்தி முதலியவற்றால் ஆச்சரியபூதனும்
அனந்த சயனன் - அரவணைமேற் பள்ளி கொள்பவனும்
ஆதிபூதன் - ஜகத்காரணபூதனும்
மாதவன் - ச்ரியாபதியுமான பெருமான்
ஓர் வெற்பு அகதது நிற்பதும் வீண் - விலக்ஷணமான திருவேங்கடமலையிலே நின்றருள்வதும் பரமாகாசமென்னும் திருநாட்டி

விளக்க உரை

தம்முடைய திருவுள்ளத்தினின்றும் எம்பெருமான் பேராமல் இங்கேயே ஸ்தாவாப்ரதிஷ்டையாயிருக்கிற இருப்பிலே மிகவும் ஈடுபட்டு, எம்பெருமான் திருவேங்கட மலையில் நிற்பதும் திருநாட்டிலே இருப்பதும் திருப்பாற்கடலிலே கிடப்பதுமெல்லாம் தன்னோடுண்டான முறையை அறியாதே நான் அஸத்கல்பனாயிருந்த காலத்திலேயாம்: நான் முறையறிந்து பரிமாறினபின்பு அவ்வெம்பெருமானுடைய பரிமாற்றமெல்லாம் எனது நெஞ்சினுள்ளே யாய்த்து என்கிறார்.

English Translation

His standing on the hill so high, His sitting in the sky above, His sleeping in the ocean-deep, was all before the Self was born. The wonder-Lord the first-cause Lord, the Lord who sleeps eternally, His standing, sitting, reclining -- all the acts are in my heart.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்