விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நின்றது எந்தை ஊரகத்து*  இருந்தது எந்தை பாடகத்து,* 
    அன்று வெஃகணைக் கிடந்தது*  என்னிலாத முன்னெலாம்,*
    அன்று நான் பிறந்திலேன்*  பிறந்த பின் மறந்திலேன்,* 
    நின்றதும் இருந்ததும்*  கிடந்ததும் என் நெஞ்சுளே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஊரகத்து - திருவூரகத்திலே
நின்றது - நின்றருளினதும்
பாடகத்து - திருப்பாடகத்திலே
இருந்தது - வீற்றிருந்ததும்
வெஃகனை - திருவெஃகாவில்

விளக்க உரை

உலகத்திலே ஒருவனுக்கு ஒருவன் கடன்கொடுத்திருந்தால் அந்தக் கடனைத் திருப்பிவாங்கிக் கொள்வதற்காகக் கடனாளி வீட்டிலேவந்து கேட்கும்போது முதலில் சிலநாள் நின்றுகொண்டே கேட்டுவிட்டுப் போய்விடுவன்: அவ்வளவில் காரியம் ஆகாதே; மறுபடியும் வந்து சிலநாள்வரையில் திண்ணைமீது உட்கார்ந்து கொண்டு கடனை நிர்பந்தித்துப்போவன்; அவ்வளவிலும் கைபுகாவிடில் ‘கடனைத் தீர்த்தாலொழியப்போல தில்லை’ என்று படுக்கைபடுத்து நிர்ப்பந்திப்பன்; இப்படியாகவே எம்பெருமானும் அஸ்மதாதிகள் செலுத்தவேண்டிய கைங்கரியக் கடனைப் பெற்றுக் கொள்வதற்காக ஓரிடத்தில் நின்று பார்க்கிறான். மற்றோரிடத்தில் வீற்றிருந்து பார்க்கிறான்; இன்னுமோரிடத்தில் சாய்ந்து பார்க்கிறான்- திருவூரகத்திலே நீற்கிறான், திருப்பாடகத்திலே இருக்கிறான்; திருவெஃகாவிலே கிடக்கிறான்; இப்படி நிற்பது இருப்பது கிடைப்பதாகிறவிவை எப்போதென்னில்; நான் ஆபிமுக்யம் பண்ணப்பெறாத காலத்திலேயாய்த்து, உபயவிபூதிநாதனான தான் ஸம்ஸாரியான வெனக்கு ருசிபிறவாதகாலமெல்லாம் ருசிபிறக்கைக்காக நின்றா னிருந்தான் கிடந்தான்; எனக்கு ருசியைப் பிறப்பிக்கை அளவுக்கு ருசிபிறக்கைக்காக நின்றானிருந்தான் கிடந்தான்; எனக்கு ருசியைப் பிறப்பிக்கை அவனுக்கு ஸாத்யம் (பலன்): அதற்கு ஸாதகம்- நிற்றவிருத்தல் கிடத்தல்கள், பலன் கைபுகுந்தவாறே திவ்ய தேசங்களிலே நிற்றலிருத்தல் கிடத்தல்களைத் தவிர்த்து (“அரவத்தமணியினோடு மழகிய பாற்கடலோடும். அரவிந்தப்பாவையுந்தானு மகம்படி வந்து புகுந்து” என்னுமாபோலே) அவ்விருப்புகளையெல்லாம் எனது நெஞ்சிலே செய்தருளினானென்கிறார். இரண்டாமடியில், நானிலாத என்ன வேண்டுமிடத்து என்னிலாத என்றதை வடமொழியில் ஆர்ஷப்ரயோகங்களைப் போலவும் சாந்தஸப்ரயோகங்களைப்போலவும் கொள்க: ‘அப்பனையென்று மறப்பன் என்னாகியே” என்ற திருவாய்மொழிப் பிரயோகமும் நோக்கத்தக்கது.

English Translation

When I was naught in days of yore, the Lord reclined in Vehkanai, -- the Lord who stands in Padakam, the Lord who sits in Urakam. Then the Self was not yet born, but once it was not yet born, but once it was, it ne’er forget; His standing, sitting, reclining -- all the acts are in my heart.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்