விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நடந்தகால்கள் நொந்தவோ*  நடுங்க ஞாலம் ஏனமாய்,* 
    இடந்த மெய் குலுங்கவோ?*  இலங்கு மால் வரைச்சுரம்*
    கடந்த கால் பரந்த*  காவிரிக் கரைக் குடந்தையுள்,* 
    கிடந்தவாறு எழுந்திருந்து பேசு*  வாழி கேசனே!  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விலங்கு - நீர் பெருகவொண்ணாதபடி    தடையாயிருக்கிற
மால் வரை - பெருப்பெருத்த மலைகளையும்
கரம் - பாலைநிலம் முதலிய அருவழிகளையும்
கடந்த - (வேகத்திலே) கடந்துகொண்டு வருகின்ற
கால் பரந்த - விஸ்தாரமான வாய்க்கால்களையுடைய

விளக்க உரை

இப்படி ஆரவாமுதாழ்வார் திருவடிகளிலே அநுபவிக்க இழிந்த இவ்வாழ்வாரை நோக்கி அப்பெருமான் வாய்திறந்து ஒரு வார்த்தை யருளிச் செய்யாமலும் கைகோவி அணைத்தருளாமலும் ஏகாகாரமாகக் கண்வளர்ந்தருளக் காண்மையாலே ‘இது அர்ச்சாவதாரஸமாதி’ என்று இவர் திருவுள்ளம் பற்றாமல், ஏதோ அளவற்ற ச்ரமத்தினால் இப்படி திருக்கண் வளர்ந்தருள்கிறாரென்று அதிசங்கை பண்ணி, “வடிவினையில்லா மலர்மகன் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி” என்கிறபடியே பரமஸுகுமாரமான திருவடிகளைக்கொண்டு உலகங்களை அளந்ததனாலுண்டான ஆயாஸத்தாலோ? அன்றி, பூமியைப் பாயாகச்சுருட்டி எடுத்துப் போன ஹிரண்யாக்ஷனை மஹா வராஹமூர்த்தியாய்க் சொன்று அப்பூமியைக் கொணர்ந்து பழையபடி விரித்ததனாலுண்டான ஆயாஸத்தாலோ இங்ஙனே தேவரீர் ஆடாது அசங்காது திருக்கண்வளர்த்தருள்கிறது?; இதை எனக்குத் தெரியவருளிச் செய்யவேணும் என்கிறார். உலகளந்த ச்ரமமாகில் திருவடிகளைப் பிடிக்கவும் உலகிடந்த ச்ரமமாகில் திருமேனியைப் பிடிக்கவும் பார்க்கிறார்போலும். (விலங்குமால் இத்யாதி.) பல மலைகளையும் பல பாலை நிலங்களையும் கடந்துகொண்டு,பெருமாளுக்கு கீதோபசாரம் பண்ணவேணுமென்னும் அபிநிவேசத்தாலே காவேரி ஓடி வருகின்றானென்க. எழுந்திருந்து போசு = கண் வளர்ந்த***யின் காரணத்தை சயனித்துக் கொண்டே அருளிச் செய்யலாகாது; என்னுடைய அச்சம் தீரும்படி எழுந்திருந்து அருளிச்செய்யவேணும் என்கிறார். எழுந்திருக்கும்போது உண்டாகக்கூடிய சேஷ்டிதங்களைக் காணவும் அருளிச்செய்யும்போதை ஸ்வரத்தைக்கேட்கவு>ம் விரும்புகிறபடி.

English Translation

Is it because your feet are hurt, is it because your body aches, -- through feat of traversing the earth, you lie amid the Kaveri that fans out in Kudandai plains? Pray rise O Lord and speak a word, O Kesava, my Wonder Boar!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்