விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செழுங்கொழும் பெரும்பனி பொழிந்திட,*  உயர்ந்தவேய்- 
    விழுந்துஉலர்ந்துஎழுந்து*  விண்புடைக்கும் வேங்கடத்துள்நின்று*
    எழுந்திருந்து தேன்பொருந்து*  பூம்பொழில் தழைக்கொழும்* 
    செழுந்தடங் குடந்தையுள்*  கிடந்தமாலும் அல்லையே?  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எழுந்து - (அம்மூங்கிற்பணைகள்) உயரக் கிளம்பி
விண் புடைக்கும் - விண்ணுலகத்தை முட்டும்படியான உந்நதியை யுடைய
வேங்கடத்துள் - திருவேங்கடமலையிலே
நின்று - நின்றருளி
தேன் - வண்டுகளானவை

விளக்க உரை

“நிலையார நின்றான் தன் நீள்கழலே யடைநெஞ்சே” என்று நிலையழகிலே ஈடுபடுவார்க்கும் “கிடந்ததோர் கிடக்கைகண்டு மெங்ஙனம் மறந்து வாழ்கேன்?” என்று சயகத் திருகோலத்திலே ஈடுபடுவார்க்கும் போக்யமாகத் திருவேங்கடமலையில் நின்றருளியும் திருக்குடந்தையில் சாய்தருளியும் போருகிறது. அடியார் பக்கலுள்ள வ்யாமோஹத்தின் காரியமன்றோ வென்கிறார். உலர்ந்து= பணி உரை; எச்சத்திரிபு.

English Translation

You stand in Venkatam the hill where bamboo shoots know how to pray; They drop to ground by dew of night and rise again by heat of Sun. you lie in cool Kudandai plains where bees in blossoms fill the bower; they fly so high and drop again to drink the nectar of the Lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்