விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சாலிவேலி தண்வயல்*  தடங்கிடங்கு பூம்பொழில்,* 
    கோலமாடம் நீடு*  தண் குடந்தை மேய கோவலா,*
    காலநேமி வக்கரன்*  கரன்முரன் சிரம் அவை,* 
    காலனோடு கூட*  விற்குனித்த வில்கை வீரனே!    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கரன் முரன் - கொடியவனான முரனென்ன இவர்களுடைய
சிரம் அவை - தலைகளானவை
காலனோடு கூட - யமலோகம் போய்ச் சேரும்படியாக
வில்குனித்த- வில்லை வளைத்த
வில் கை - அழகிய திருக்கையையுடைய

விளக்க உரை

காலநேமி யென்பவன் இராவணனுடைய மாதுலன்; இவன், தாரகாசுர யுத்தத்தில் எம்பெருமானாற் கொல்லப்பட்டவன், வக்கரன் - தந்தவக்ரன்; தத்துவக்த்ரன் என்று சொல்வதுமுண்டு. கண்ணபிரான் ருக்மிணிப்பிராட்டியை ஸ்வீகரித்தருளினபோது எதிர்த்து வந்து போர்செய்த அரசர்களில் இவனொருவன், முரண் = நரகாசுரனுடைய மந்திரி. கரன் என்று ஒரு ராக்ஷணுண்டாகிலும் அவன் இங்கே விவக்ஷிதனல்லன்; அவன் ராமாவதாரத்தில் கொல்லப்பட்டவன்; இப்பாட்டில் க்ருஷ்ணாவதார சரிதங்கள் அநுஸந்திக்கப்படுவதால் கரன் என்பது முரனுக்கு அடைமொழியாயிற்று. *** என்ற வடசொல் க்ரூரனென்ற பொருளையுமுடையது. “சிரமவை காலனோடுகூட” என்றவிடத்து “அறுத்து” என்றொரு வினையெச்சத்தை வருவித்துக்கொண்டு உரைத்ததுமொன்று.

English Translation

O Cowherd-Lord reclining in Kudandai over cool waters, surrounded by the fields and groves and richly laid-out mansion-homes. You rolled the head of Kalanemi, sent him down the path of Hell. You felled the heads of Vakradanta, and the horrible Mura.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்