விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நெய்யிடை நல்லதோர் சோறும்*  நியதமும் அத்தாணிச் சேவகமும்* 
    கை அடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு*  காதுக்குக் குண்டலமும்* 
    மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து*  என்னை வெள்ளுயிர் ஆக்கவல்ல* 
    பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப்*  பல்லாண்டு கூறுவனே    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நெய் எடை - நெய்யோடு ஸமமான நிறையை யுடையதாய்;
நல்லது - போக்யமாய்;
ஓர் - விலக்ஷணமான;
சோறும் - ப்ரஸாதத்தையும்;
நியதமும் அத்தாணி சேவகமும் - எப்போதும் பிரியாமல் கூடவேயிருந்து செய்கிற ஸேவக வ்ருத்தியையும்;

விளக்க உரை

உரை:1

இந்த பாசுரம் மிகவும் சிறப்பான பாசுரம் ஆகும். இந்த இருள்தருமா ஞாலத்திலே ஐஸ்வர்யார்த்திகளே நிறைய உள்ளனர். அண்டக்குலத்துக்கு என்று தொடங்கின பாசுரத்திலே ஐஸ்வர்யார்த்திகளை அழைத்தார்.அவர்கள் எல்லோரும் திருந்தி வந்தமையை சொல்லும் பாசுரம் இது. நெய்யோடு கூடின பிரசாதத்தையும், சேவன வ்ருத்தியையும், தாம்பூலத்தையும், கழுத்துக்கு உண்டான ஆபரணங்களையும், காதுக்கு உண்டான குண்டலத்தையும், உடம்பில் பூசிக்கொள்ளும் சந்தனத்தையும் மற்றும் ரஜஸ் தமோ குணங்களால் நான் விரும்பின அனைத்தையும் கொடுத்து, சம்சாரியாய் கிடந்த என்னை சாத்விகனாக(ஐஸ்வர்யம் தியாஜ்யம், பகவத் கைங்கர்யமே பரம புருஷார்த்தம்) ஆக்கின, கருடனைக் கொடியாகக் கொண்ட எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடுவேன்.

உரை:2

நெய்யுடன் அன்போடு இடப்படும் உணவு வகைகளையும், பிரியாமல் கூடவே இருந்து தொண்டு செய்யும் வாய்ப்பையும், வெற்றிலைப் பாக்கையும், கழுத்தாரமும், காதிற்குக் குண்டலத்தையும் உடம்பிலே பூசிக் கொள்ளச் சந்தனத்தையும் தந்து என்னை ஆட்கொண்டான். அவன் பாம்புக்குப் பகைவனாக இருக்கும் கருடனைத் தன்கொடியாகக் கொண்ட எம்பெருமானுக்கு திருபல்லாண்டு பாடுகிறேன்.

English Translation

The Lord gives me good rice food with Ghee, and privileges of attendance, Betel leaf and Areca nut, ornaments for the neck and ears and fragrant Sandal paste to smear. He purges my soul. He has the Garuda bird,-foe of the hooded snakes, - on his banner; for him I sing Pallandu.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்