விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பாலின்நீர்மை செம்பொன்நீர்மை*  பாசியின் பசும்புறம்,* 
    போலும் நீர்மை பொற்புஉடைத்தடத்து*  வண்டு விண்டுஉலாம்,*
    நீலநீர்மை என்றுஇவை*  நிறைந்த காலம் நான்குமாய்,* 
    மாலின் நீர்மை வையகம்*  மறைத்தது என்ன நீர்மையே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பாலின் நீர்மை - பாலின் நிறம்போன்ற வெண்மையென்ன
செம்பொன் நீர்மை - சிவந்த பொன்னின் நிறம் போன்ற செம்மையென்ன
வையகம் - இவ்வுலகத்திலுள்ளவர்கள்
மறைத்தது - திரஸ்கரித்தது
என்ன நீர்மை - என்ன ஸ்வபாவம்!
 
 

விளக்க உரை

கீழ்ப்பாட்டின் “அஞ்சனத்தவண்ணனாய்” என்று திருமேனி நிறம் ப்ரஸ்துதமாகவே, க்ருதம் முதலிய யுகங்களில் சேதநர் தமது ஸத்வம் முதலிய குணங்கட்குத் தகுதியாக ச்வேதம் முதலிய வர்ணங்களை விரும்புகையாலே அவ்வக் காலங்களிலே அந்தந்த நிறங்களைப் பரிக்ரஹித்து முகங்காட்டினபடியை அநுஸந்தித்து, இப்படி முகங்காட்டச் செய்தேயும் ஸம்ஸாரிகள் காற்கடைக் கொள்ளுகிறார்களே! இதென்ன துர்வாஸநாபலம்!! என்று வருந்துகிறார். “பாசிபோலும் நீர்மை” என்னாதே “பாசியின் பசும்புறம்போலு நீர்மை” என்றது- பசுமை நிறத்தின் சிறப்புத்தோற்றலாம்; பாசியின் பசுமை குறைந்த புறமும் உண்டிறே. “நீலநீர்மை” என்னுமளவே போதுமாயிருக்க “பொற்புடைத்தடத்து வண்டுவிண்டுலல்” என்று நீலத்திற்கு அடைமொழி கொடுத்தது- உபமேயத்தில் போக்யதையைத் தோற்றுவிக்கைகாக வென்க. மூன்றாமடியின் முடிவில் “நான்குமாய்” என்று பெரும்பாலும் பாடமோதுவார்களேனும் அது உபேக்ஷிக்கத்தக்கதாம். “நான்குமாம் மாலின்” என்க.

English Translation

The white colour of milk at first, the red colour of glowing gold, the yellow hue of glossy moss, the dark colour of Kaya hue, the four Yugas are filled with all the four colours aforesaid, Lord! Your form and features lie hidden in all the lasting world you made.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்