விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அம்புஉலாவு மீனும்ஆகி*  ஆமைஆகி ஆழியார்,* 
    தம்பிரானும்ஆகி மிக்க அன்பு*  மிக்கு அதுஅன்றியும்*
    கொம்புஅராவு நுண்மருங்குல்*  ஆயர்மாதர் பிள்ளையாய்* 
    எம்பிரானும் ஆயவண்ணம்*  என்கொலோ? எம் ஈசனே! 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அம்பு உலாவும் மீனும் ஆகி - ஜலத்தில் உலாவுகின்ற மீனாகியும்
ஆமை ஆகி - ஆமையாகியும் (அவதரித்து)
மிக்கது - அதிசயத்தை அடைந்தருளிற்று
அன்பு மிக்கது - மிகுந்த அன்பையும் காட்டியருளிற்று;
அன்றியும் - இதற்கு மேலும்

விளக்க உரை

“ஆழியார் தம்பிரானாகியும் அம்புலாவு மீனுமாகி ஆமையாகி” என்று அந்வயித்துக் கொயாள்ள வேணுமென்பர். சக்கரத்தாழ்வாரை அடக்கி ஆளுமவன் என்றால் பரத்வத்திற்கு அதனில் மேற்பட்ட லக்ஷணமில்லை; சக்கரக்கையன் என்பதும் பராத்பரன் என்பதும் பரியாயமாகக் கொள்ளத்தக்கவை; ஆகவே, “ஆழியார் தம்பிரானாகியும்” என்றது- பாரத்பரனா யிருந்துவைத்தும் என்றபடியாம்- பரத்வத்தைப் பேணாமல் மீனாவும் ஆமையாயும் பிறந்தவாறு என் கொல்? என்கிறார். மிக்கது = இப்படி க்ஷûத்ரயோநிகளிற் பிறந்ததைப் பாவிகள் தாழ்வாக நினைத்தாலும் ஞானிகள் “பி பிறப்பாயொளிவரு முழுநலம்” என்று- பிறக்கப் பிறக்க ஒளிவளர்வதாக அருளிச் செய்வராகையாலே அப்படியே இவருமருளிச் செய்கிறார். மிக்கது- தாழ்ந்து பிறந்தாலும் மேன்மையே விளங்க நின்றீர் என்கை. இது முன்னிலைப் பொருளில் வந்த படர்க்கை; ***- என்று வடநூலார் பிரயோகிப்பதுபோல: இப்பிரயோகம் கௌரவாதி சயத்தைக் காட்டும். அன்புமிக்கது என்ற விடத்தும் இங்ஙனமே. தாழ்பிறந்தாகிலும் அடியார்களின் காரியத்தைக் குறையறச் செய்துமுடிக்க வேணுமென்னும் அன்பினால் இப்படி பிறந்தாய் என்று கருத்து.

English Translation

You became the fish at first and turtle in the water next. You became the wielder of a discus and a conch so dear. You became the son of serpent-slender-waisted cowherd-dame. You became my Lord as well, and master over all the world!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்