விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    விண்கடந்த சோதியாய்*  விளங்கு ஞான மூர்த்தியாய்,* 
    பண்கடந்த தேசம்மேவு*  பாவநாச நாதனே,*
    எண்கடந்த யோகினோடு*  இரந்துசென்று மாணியாய்,* 
    மண்கடந்த வண்ணம்நின்னை*  யார்மதிக்க வல்லரே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாணி ஆய் - வாமனாய்
இரந்து சென்று - (மூவடிமண் வேணுமென்று) யாசித்துச் சென்று
மண் கடந்த வண்ணம் - பூமியை யளந்துகொண்ட விதத்தையும்
நின்னை - உன்னையும்
ஆர் மதிக்க வல்லர் - அளவிடக்கூடியவர்கள் யார்?

விளக்க உரை

“விண்கடந்தசோதியாய்!” என்றது- விபுவான மூலப்ரக்ருதியானது உனக்குள்ளேயாம்படியான ஸ்வரூவைபவத்தையுடைய ஸ்வயம்ப்ரகாச வஸ்துவானவனே, என்றபடி. விண் என்றால் ஆகாசமென்று பொருளாமே யல்லது மூலப்ரக்ருதியென்று பொருளாகக் கூடுமோவென்னில்; ஆம்; ப்ருஹதாரண்யக உபநிஷத்திலே ஐ(ரூ-அ-எ ” என்றவிடத்தில் ஆகாச சப்தத்தை மூலப்ரக்ருதிபரமாக வியாக்கியானித்துள்ளார்கள்; “சுரரறிவருநிலை விண்” என்று திருவாய்மொழியிலும் விண் என்று மூவப்ரக்ருதியை அருளிச்செய்திருக்கிறார். “விளங்கு ஞான மூர்த்தியாய்” என்றது - ஸ்யம்ப்ரகாசமாய் ஜ்ஞாநசப்தவாச்யமான ஆத்மஸ்ரூபத்தை சரீரமாகவுடையவனே! என்படி. ஆக, முதலடியிலுள்ள இரண்டு ஸம்போதநங்களாலும் எம்பெருமானுக்கு ‘துணோ ***” என்று சொல்லப்பட்டுள்ள விபுத்வ ஹூக்ஷ்மத்வங்கள் சொல்லப்பட்டனவென்க. “விண்கடந்த சோதியாய்” என்ற முதல் ஸம்போதநத்தில் *** என்னுமிடம் சொல்லுகிறது; விளங்கு ஞானமூர்த்தியாய்” என்ற இரண்டாவது ஸம்போதநத்தில் *** என்னுமிடம் சொல்லுகிறது. (பண் கடந்த இத்யாதி.) பண் என்று ஸ்வரத்துக்குப் பேராகிலும் இங்கு ஸ்ரப்ரதமான வேதத்தை லக்ஷணையால் குறிக்கும். பண்கடந்த = வேதத்தை அதிக்ரமித்த- வேதத்திற்கு விஷயமாகாத என்கை; வேதங்களாலே பரிச்சேதிக்க முடியாத அப்ராக்ருத ஸ்தலமான பரமபதத்திலே நித்யவாஸம் செய்தருள்கின்ற பரமபுருஷனே! பாவநாசநாதன் - வட மொழித்தொடர். ஆக இரண்டு அடிகளம் ஸம்போதநமாய் முடிந்தன; இனி பின்னடிகளில் உலகளந்த சரிதம் அளவிட முடியாத ஒப்பற்றதொரு சரிதமென்கிறார். யோக = யோஹ’ என்ற வடசொல் ‘யோகு’ எனக் குறைந்து கிடக்கிறது. யோருமென்று கல்யாண குணத்துக்கும் உபாயத்துக்கும் பெயர். இங்கு அவ்விரண்டுபொருளும் ஆகலாம். யாசகவேஷத்துக்கும் உபாயத்துக்கும் பெயர். இங்கு அவ்விரண்டுபொருளும் ஆகலாம். யாசகவேஷத்தோடு எழுந்தருளச் செய்வதேயும் மற்றபடி கல்யாண குணயோகத்தில் குறையில்லை யென்கை. மஹாபலியின் செருக்கை யடக்குவதற்கு நல்ல உபாயமறிந்து செய்து செயலாதலால் உபாயப்பொருளும் பொருந்துமென்க.

English Translation

O Lord effulgent way beyond the sky, O form of consciousness! A radiance beyond all words of praise, O Hell-destroyer-Lord! With qualities uncountable you came to beg as manikin. The way you took the Earth and all- now who can fathom thee, O Lord!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்