விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கங்கைநீர் பயந்தபாத*  பங்கயத்து எம் அண்ணலே,*
    அங்கையாழி சங்குதண்டு*  வில்லும் வாளும் ஏந்தினாய்,*
    சிங்கமாய தேவதேவ!*  தேனுலாவு மென்மலர்,*
    மங்கைமன்னி வாழுமார்ப!*. ஆழிமேனி மாயனே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கங்கை நீர் - கங்கா தீர்த்தத்தை
பயந்த - உண்டாக்கின
பாத பங்கயத்து எம் அண்ணலே - தீருவடித் தாமரையையுடைய எம்பெருமானே!
அம் கை - அழகிய திருக்கையிலே
ஆழி சங்கு தண்டும் வில்லும் வாளும் - பஞ்சாயுதாழ்வாரக்ளை

விளக்க உரை

அஹங்காரிகளில் தலைவனான ருத்ரனுக்கும் ஸ்ரீபாத தீர்த்தத்தை தந்தருளி அவனைப் பாவனஞ் செய்தருளினவனன்றோ நீ; என்றபடி- இடர்ப்பட்டு வரும் அடியார்களைத் துயர்நீக்கி ரக்ஷிப்பதில் காலதாமதம் நேரிடாமைக்காகப் பஞ்சாயுதாழ்வார்களை எப்போதும் திருக்கையிலே எந்திக் கொண்டிருப்பவனன்றோ நீ: அந்த ஆச்ரிதரக்ஷண சீக்ஷையை இருஸமய விசேஷத்திலே நரசிங்கமாய்த் தோன்றி வெளியிட்டவனன்றோ நீ; இப்படிப்பட்ட குணங்களுக்குத் தோற்றுப் பெரிய பிராட்டியார் உன்னை விடமாட்டாதே எப்போதும் மார்பில் மன்னியிருக்கின்றா என்றோ; கருங்கடலைக் கண்டவாறே கண்களுங் குளிர்ந்து கைல தாபங்களும் ஆறவதுபோல உன் திருமேனியை ஸேவித்தவாறே என் கண்கள் குளிர்ந்த தாபத்ரயமும் ஆறம்படியா யிராநின்றதே! என்று ஈடுபடுகிறார்.

English Translation

O my Lord with lotus feet, the origin of the Ganga-ji! The mace and conch and dagger and the bow and discus are your Five. O Lord of gods, you came as mighty lion to save the wicked’s son. The lotus dame with bees around does live forever on your chest!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்