விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வால் நிறத்தொர் சீயமாய்*  வளைந்த வாளெயிற்றவன்,* 
    ஊன்நிறத்து உகிர்த்தலம்*  அழுத்தினாய். உலாயசீர்,*
    நால்நிறத்த வேதநாவர்*  நல்ல யோகினால் வணங்கு,* 
    பால்நிறக் கடல்கிடந்த*  பற்பநாபன் அல்லையே?*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நல்ல யோதினால் - விலக்ஷணமான உபாயத்தினாலே
வணங்கு - வணங்குவதற்கு இடமான
பால்நிறக் கடல் - திருப்பாற் கடலிலே
கிடந்த - பள்ளிகொண்டருளின
பற்பநரபன் அல்லையே - பத்மநாபன் நீயேயன்றோ

விளக்க உரை

ப்ரளயகாலத்து ஆபத்தைப்போக்கி வடதளசாயியாக அமைந்தது மிகவும் அற்புதமான செயல் என்று அதிலே ஈடுபட்டுப் பேசினார் கீழ்ப்பாட்டில். இது அகடிதகட நாஸாமர்த்தியமானது நரசிங்கவுருவங்கொண்ட ஸாமர்த்தியத்தின் முன்னே ஒரு பொருளாக மதிக்கத்தக்கதோ? ****** என்கிறபடியே சரீரத்தில் ஏகதேசத்தை மநுஷ்ய ஸஜாதீயமாக்கியம் ஏகதேசத்தைத் திர்யக் ஸஜுதியமாக்கியும் இப்படி இரண்டு ஜாதியை ஏகவிக்ரஹமாக்கித் துணிலேவந்து தோன்றிய வித்தகம் ஸாமாந்யமானதோ? இதனைப் பரிசோதிக்க வல்லார்? என்கிறார் இப்பாட்டில். வால் நிறத்தோர் சீயமாய் = புருஷோத்தமன் தன்ஸ்ரூபத்தை அழித்து ஸிம்ஹஸஜா தீயனது போலவே காளமேகம்போன்ற தன்நிறத்தையும் மாற்ற வெண்ணிறத்தை ஏறிட்டுக்கொள்வதே! என்று ஈடுபடுகிறார். வால் வெண்மை. இனி, வான் நிறம்” எனப் பிரித்து, திவ்யமான தன்மையையுடைய என்று பொருள் கொள்ளுதலும் நன்றே. சீயம் = சிங்கம். “வளைந்தவா ளெயிற்றவன்” என்றதனால் இரணியனுடைய பயங்கரமான வடிவுடைமை தோன்றும். ஊன்நிறம்- சரீரத்தின் மர்மஸ்தாநம்- ஹ்ருதயமென்க. உகிர்த்தலம் என்ற விடத்து, “தலம்” என்றது வார்த்தைப்பாடு. ‘உலாய” என்றது ‘உலாவிய’ என்றபடி.

English Translation

O Lord who took the form of white lion and caught the wicked king, and tore his chest with claws alone, that the entire world did rave about! O Lord who wins the praise of all and worship of the Vedic seers! O Lord with lotus in the navel, O sleeping-the-Milky-Deep!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்