விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பல் மணி முத்து*  இன்பவளம் பதித்தன்ன* 
    என் மணிவண்ணன்*  இலங்கு பொற் தோட்டின் மேல்* 
    நின் மணிவாய் முத்து இலங்க*  நின் அம்மைதன்* 
    அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி*
    ஆழியங் கையனே சப்பாணி      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் - என்னுடைய
மணிவண்ணன் - நீலமணிபோன்ற நிறமுடையவனே!
பல் - பலவகைப்பட்ட
மணி - சதகங்களையும்
முத்து - முத்துக்களையும்

விளக்க உரை

கீழிற்பாட்டில் பிரார்த்தித்தபடி நந்தகோபர் மடியிலிருந்துகொண்டு சப்பாணிகொட்டின கண்ணனைத் தன்மடியிலேயே வரவிரும்பி யசோதைப் பிராட்டி அழைக்கிறாள். அம்மைதன் - தன்மையிற்படர்க்கை. அன்றி அம்மை என்பதைப் படர்க்கையாகவே கொண்டு நந்தகோபருடைய மடியிலிருந்து சப்பாணி கொட்டுவதைக் காண்பதிலுங்காட்டில் கண்ணனைப் பிள்ளையாகப் பெறும் பாக்கியத்தையுடைய தாயின் மடியிலிருந்து சப்பாணி கொட்டுவதைக் காண்கை நமக்கு மிகவும் உகப்பாயிருக்கையாலே ஆழ்வார் அத்தை அபேக்ஷிக்கிறாராகவுமாம். பதித்த + அன்ன = பதித்தன்ன: பெயரெச்சத்தின் அகரவீறு தொகுத்தல்; பதித்து அன்ன என்றும் பிரிக்கலாம். ஆழி - ஸ்ரீஸுதர்சநாழ்வானுமாம்

English Translation

O, My gem-hued One! Over beautiful golden earrings studded with many gems, pearls and coral, your beautiful lips flashing pearly teeth, clap Chappani on your mother’s lap with beautiful hands clap Chappani.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்