விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தூய்மை யோகமாயினாய்*  துழாயலங்கல் மாலையாய்,*
    ஆமையாகி ஆழ்கடல் துயின்ற*  ஆதி தேவ,*  நின்-
    நாமதேயம் இன்னதென்ன*  வல்லமல்ல மாகிலும்,*
    சாமவேத கீதனாய*  சக்ரபாணி யல்லையே?*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நின் நாமதேயம் - உனது திருநாமங்களுக்கு வாச்யமான குசேஷ்டிதங்கள்
இன்னது என்ன - இன்னின்னவை யென்று சொல்ல
வல்லம் அல்ல ஆகிலும் - யாம் ஸமர்த்தர்களல்லோ மாயிலும்
சாம வேத கீதன் ஆய - ஸாமவேதத்திலே ப்ரதிபாதிக்கப்பட்டவனான
சக்ர சாபி அல்லையே - கையிலே திருவாழி யணிந்த பரமபுருஷன் நீயேயிறே (என்று சொல்லவல்லோம்)

விளக்க உரை

“நம் அவதாரரஹஸ்யத்தை நீர் அறிந்தபடி யென்?” என்று எம்பெருமான் திருவுள்ளமாக, “ப்ரயோஜநாந்தரபரர்க்காக இதரஸாஜாதீயராகத் திர்யக்யோநியிலே திருவவதரித்தருளின தேவரீருடைய குணசேஷ்டிதங்களை அடியேன் பரிச்சேதித்து அறியமாட்டேனேலும் அவ்வழக்கு ***- என்றறிந்தேன்” என்கிறார். தூய்மை யோகமாயினாய்! = அசித்ஸம்ஸர்க்கத்தாலே அசுத்தனான ஸம்ஸாரிக்கு உன் “க்ருபையாலே அந்த அசித்ஸம்ஸர்வர்க்கத்தை யறுத்து நித்யஸூரிகளோடே சேர்த்து உன்னை அநுபவிப்பிக்கவல்ல சுத்தியோகத்தையுடையவனே! என்படி. (நின்நாமதேயம் இத்யாதி.) நாமதேயமாவது- குணங்களையும், சேஷ்டிகளையும் சொல்லுகிற திருநாமம். ஆயினும் இச்சொல் இங்கு இலக்கணையால் திருநாமவாச்யமான குணசேஷ்டிதஙக்ளையே சொல்லக்கடவ’தாமென்பர். “நின்னாமதேயமென்று-வாச்யமான குணசேஷ்டிதங்களை ***-கமான சப்தத்தாலே லக்ஷிக்கிறது” என்ற வியாக்கியான ஸூக்தி காண்க. உன்னுடைய எண்ணில் பல்குணங்களையும் இன்புறு மிவ் விளையாட்டுகளையும் இவை யிவையென்று பகுத்துச் சொல்ல அடியேன் அமஸமர்த்தனேயாகிலும் என்றவாறு. சாமவேதநீதனாய சக்ரபானியல்லையே = நீ பரிக்ரஹித்தருளின் கூர்மவிக்ரஹம் ஸாமாக்யமானதல்லவென்றும் ஸாக்ஷாரத் ***- மாய்க் கையுந்திருவாழியுமான அதிரமணீய ஹிரண்மயவிக்ரஹம் என்றும் அறிந்தேனென்கை.

English Translation

O Lord with sacred Basil wreath, O Lord of Yogic purity! O Lord-in-ocean deep asleep, O Lord who came as turtle here! Although we cannot call you by a name as all the mortals have, we know you as the discus-lord as spoken of in Sama-Ved.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்