விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஆதிஆன வானவர்க்கும்*  அண்டமாய அப்புறத்து,* 
  ஆதிஆன வானவர்க்கும்*  ஆதிஆன ஆதிநீ,*
  ஆதிஆன வானவாணர்*  அந்தகாலம் நீஉரைத்தி,* 
  ஆதிஆன காலம் நின்னை*  யாவர்காண வல்லரே?*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஆதி ஆன - நிர்வாஹகனான
ஆதி - அதிபதி
நீ - நீயாகிறாய்;
ஆதி ஆன - ஜகத்துக்குக் கடவர்களாக ஏற்பட்டிருக்கிற
வானம் வாணர் - (பிரமன் முதலிய) மேலுலகத்தவர்களினுடைய

விளக்க உரை

உபயவிபூதியிலுமுள்ள ஸகல பதார்த்தங்களினுடையவும் ஸத்தாதிகள் தானிட்ட வழக்காகப்பெற்ற உன்னை ருத்ரன் ஒருவனையோ பரிச்சேதிக்கமாட்டான்? உபயவிபூதியிலும் பரிசேதிக்க வல்லர் இல்லையென்கிறார். ப்ரஹ்மா, தக்ஷப்ரஜாபதிகள், ஸப்தரிஷிகள், ஆதித்யர்கள் ஆகிய இவர்கள் ஸ்ருஷ்டிகர்த்தாக்கள்; இந்திரன், சதுர்த்தச மநுக்கள் ஆகிற இவர்கள் ஸ்திதிகர்த்தாக்கள்; ருத்ரன், அக்நி, யமன் முதலானவிவர்கள் ஸம்ஹாரகர்த்தாக்கள், ஆகிய இவர்களைச் சொல்லுகிறது- முதலடியில் “ஆதியானவானவர்” என்று. ‘அண்டமாயவப்புறத்தாதி யானவானவர்’- நித்யஸூரிகள். “அண்டமாள்வதாணை” “அண்டம்போ யாட்சி அவர்க்கதறிந்தோமே” இத்யாதிகளில் அண்ட சப்தம் பரமபதவாசகமாக வருதல் காண்க. இவ்விடத்துப் பெரியவாச்சர்ன்பிள்ளை வியாக்கியானத்தில் “அண்டசப்தவாச்யமான “லீலாபூதிக்கு அப்புறத்தில் அண்ட சப்தவாச்யமான பரமபதத்தில் வர்த்திக்கிற” என்பது சுத்தபாடம். ஜகத்துக்கு நிர்வாஹமான காலதத்துவமும் அவம்பெருமாளிட்ட வழக்கென்கிறது- மூன்றாமடி. எம்பெருமான் ப்ரவர்த்திப்பித்த சாஸ்த்ரங்களிலே ***-***- இத்யாதிகளாலே ப்ரஹ்மாதி தேவர்களுக்கு அவஸாநகாலம் கூறப்பட்டிருந்தலால் “அந்தகாலம் நீயுரைத்தி” எனப்பட்டது. அந்த காலம் = *** என்ற வடசொல் விகாரம். ப்ரஹ்மாதிகளுடைய ஆயுஸ்ஸுக்கு ஓர் எல்லை ஏற்பட்டிருப்பதாலும் எம்பெருமானுக்கு அது இல்லாமையாலும் இவனே முழுமுதற் கடவுள் என்பது ஸ்பஷ்டம். ஆதி ஆன காலம்நின்னை = ஆதி காலம் ஆன நின்னை என மாற்றியுரைக்கப்பட்டது;- கார்யரூபமான ஜகத்துக்களெல்லாம் லயமடைந்து போனவளவிலே ***- என்றபடி ஆதிகாலத்துக்கு நிர்வாஹகனாயிருந்த உன்னை என்றவாறு.

English Translation

The first of all celestials, the world and all that lies beyond, the cause of all celestials. The cause of cause is you my Lord! The Lord of all celestials is bound by time that you decree. O Lord of time of timelessness, now who can claim to fathom thee?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்