விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நின்றுஇயங்கும் ஒன்றலா*  உருக்கள் தோறும் ஆவியாய்,* 
    ஒன்றி உள்கலந்துநின்ற*  நின்னதன்மை இன்னதுஎன்று,*
    என்றும்யார்க்கும் எண்இறந்த*  ஆதியாய்! நின்உந்திவாய்,* 
    அன்றுநான்முகற் பயந்த*  ஆதி தேவன் அல்லையே?*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நின்று - ஸ்தாவரமாயும்
இயங்கும் - ஜங்கமமாயுமிருக்கிற
ஒன்று அலா ருக்கள் தோறும் - பலவகையான சரீரங்கள் தோறும்
ஆவி ஆய் - ஆத்மாவாய்
ஒன்றி - பொருந்தி

விளக்க உரை

எம்பெருமான் ஆழ்வாரை நோக்கி “ஆழ்வீர்! நம்மை உள்ளபடி அறிவிக்கவற்றான வேதங்களும் மந்த்ரஹஸ்யங்களும் பலபல உண்டாயிருக்க ‘யாவர் காணவல்லரே’ என்பானேன்?” என்ன; அந்தர்யாமித்வத்தாலும் ஜகதேக காரணத்வத்தாலும் ஸகலாதாரனாயிருக்கிற ஸ்வபாவத்தை ஸ்தூலத்ருஷ்டியாலே ஸமுதாயருபே அறியில் அறியலாமத்தனையொழிய, தேவரீர் காட்ட நான் அலகலகாகக் கண்டாற்போலே ஒருவர்க்குங் காண முடியாதென்கிறார்- இதில் நின்று என்னு- நிலைபேராதே நிற்கும் மலைமுதலிய ஸ்தாவர பதார்த்தங்களைச் சொல்லுகிறது; இயங்கும் என்று- அசையக்கூடிய பசுபக்ஷ்யாதி ஜங்கம பதார்த்தங்களைச் சொல்லுகிறது; இயங்கும் என்று- அசையக்கூடிய பசுபக்ஷ்யாதி ஜங்கம பதார்த்ங்களைச் சொல்லுகிறது. ஒன்று அலா = ஒன்று அல்லாத என்றாய், பலபலவென்றபடி. நின் உந்திவாய் இத்யாதி. தேவரதி ஸகலபதார்த்தங்களும் அழிந்து கிடந்த அக்காலத்தில் உன்னுடைய திருநாபிக்கமலத்திலே பிரமனைப் படைத்த ஜகதேக காரணனல்லையோ நீ உந்திவாய் = வாய்- ஏழனுருபு. நான் முகன் + பயந்த, நான்முகற்பயந்த.

English Translation

The Soul of all the sentient and form of the entire transient, blending into each and everybody in the world around! Eternally evading all the sages and the seekers. O! You bore the four-head Maker o your lotus-navel in the past.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்