விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஐந்தும்ஐந்தும் ஐந்தும்ஆகி*  அல்லவற்று உளாயுமாய்,* 
    ஐந்துமூன்றும் ஒன்றும்ஆகி*  நின்ற ஆதி தேவனே,* 
    ஐந்தும்ஐந்தும் ஐந்தும்ஆகி*  அந்தரத்துஅணைந்துநின்று,* 
    ஐந்தும்ஐந்தும் ஆயநின்னை*  யாவர்காண வல்லரே?*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஐந்தும் - ஜ்ஞாநேந்திரியங்கள் ஐந்தும்
ஐந்தும் - கருமேந்திரியங்கள் ஐந்தும்
ஐந்தும் - தந்மாத்ரைகள் ஐந்தும்
மூன்றும் - ப்ரக்ருதி, மஹாந், அஹங்காரம் என்ற மூன்றும்
ஒன்றும் - மநஸ்ஸாகிய ஒன்றும்

விளக்க உரை

ர்த்தியத்தாற் காணக்கூடியவர்கள் யாருமில்லை யென்கிறார். முன்னிரண்டடிகளால் லீலாவிபூதியோகமும், பின்னிரண்டடிகளால் நித்யவிபூதியோகமும் அருளிச்செய்யப்படுகின்றன. முதலடியில், ஐந்தும்- ப்ருதிவி. அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் (நிலம் நீர் தீ கால்விசும்பு) என்ற பஞ்சபூதங்கள். ஐந்தும் = த்வக்கு, சக்ஷûஸ், ச்ரோத்ரம், ஜிஹ்வா, க்ராணம் (செவ் வாய் கண் மூக்கு உடல்) என்ற பஞ்சஜ்ஞாநேந்திரியங்கள். ஐந்தும்- வாக்கு’ பாணி, பரதம், பாயு, உபஸ்தம் (வாய்,கை, கால், குதம்,குறி)என்ற பஞ்சகர்மேந்திரியங்கள். இரண்டாமடியில், ஐந்தும் = சப்ததந்மாத்ரை, ஸ்பர்சதந்மாத்ரை,ரூபதந்தமாதரை, ரஸதந்மாத்ரை, கந்ததந்மாத்ரை என்னும் பஞ்சதந்மாத்ரைகள். மூன்றும் = அலிபக்ததமஸ்ளென்றும் அக்ஷரமென்றும் சில அவஸ்தைகளை யுடைந்தாயிருக்கிற ப்ரக்ருதி (1), அந்தப்ரக்ருதியில் நின்றும் குணவைஷம்யமடியாகப் பிறக்கிற விகாரங்களுள் முதலதான மஹாக் (2), அந்த மஹத்தத்வத்தில் நின்றும் பிறக்கிற அஹங்காரம் (3), ஆக மூன்று, ஒன்று- மநஸ்ஸு. ஆக இருபத்தினாலு தத்துவங்கள் சொல்லப்பட்டன. (முதலடியில் பதினைந்து; இரண்டாமடியில் ஒன்பது, ஆக-24.) ஆகிநின்ற என்ற ஸாமாநாதிகரண்யம்- இத் தத்துவங்களுக்கும் எம்பெருமானுக்குமுள்ள ஸம்பந்தங்களெல்லாவற்றையும் உளப்படுத்தியதாம். அல்லவற்றுளாயுமாய்- இப்படி இருபத்தினாலாக வகுக்கப்பட்ட ப்ரக்ருதியிலே ஸம்ஸ்ருஷ்டரான ஜீவாத்மாக்களுக்கு அந்தர்யாமியாய் என்றபடி, அல்லாவை என்றால் ஜீவாத்மாக்களை எங்ஙனே குறிக்கும்படியென்னில்; அல்லவை என்பதற்கு ‘அப்படியாகாதவை’ என்று பொருள். ப்ரகரணாநுகுணமாக ‘அசித்தாகாதவை’ என்று பொருளாய் அசேக்நவ்யாவ்ருத்தரான சேதநர்களைக் குறிக்கிறபடி.

English Translation

You became the Five, the Five, the Five in all, the indweller. The Five and Three, the wonder-Lord, the origin of all that is; Then the Five, you stand in high Heaven above. The Five, the Five that you became, who can solve the mystery?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்