விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆறும் ஆறும் ஆறுமாய்*  ஓர்ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்,* 
    ஏறுசீர் இரண்டும்மூன்றும்*  ஏழும் ஆறும் எட்டுமாய்,*
    வேறு வேறு ஞானம்ஆகி*  மெய்யினோடு பொய்யுமாய்*, 
    ஊறொடுஓசை ஆயஐந்தும்*  ஆய ஆய மாயனே!  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஓர் ஐந்தும் ஆய் - பஞ்சமஹா யஜ்ஞங்களால் ஆராத்யனாய்
ஐந்தும் (ஆய்) - பஞ்சாஹுதிகளாலே ஆராத்யனாய்,
ஐந்தும் (ஆய்) -  (கார்ஹபத்யம் முதலிய) பஞ்சாக்நிகளைச் சரீரமாகக் கொண்டவனாய்,
ஏறு சீர் -  மிக்க அதிசயத்தையுடைய
இரண்டும் (ஆய்) -  (ஜ்ஞாந விரக்திகளாகிற) இரண்டையும் அளிக்கவல்லனாய்

விளக்க உரை

ஆறும் = ஆக்நேயம்,அக்நீஷோமீயம், உபாம்சுயாஜம், ஐந்த்ரம் இரண்டு ஐந்த்ராக்கம் என்ற ஆறு யாகங்கள். (இவற்றுள் முதல் மூன்று யாகங்கள் பௌர்ணமியில் செய்யப்படுகிறபடியால் “பௌர்ணமாஸம்” என்றும், மற்ற மூன்றும் அமாவாஸ்யையில் செய்யப்படுகிறபடியால் ‘தர்சம்’ என்றும், இவ்விரண்டும் ஸ்வர்க்கமாகிய ஒரே பலத்திற்கு ஸாகரமாகையால் ‘தர்சபௌர்ணமாஸம்’ என்று ஒரே பெயராகச் சொல்லப்படுகிறது என்றறிக.) இங்கே இந்த ஆக்நேயம் முதலிய ஆறு பாகங்களைச் சொல்லியது மற்ற எல்லாக் கருமங்களும் உபலக்ஷணமென்று கொள்க. “ஆறுமாய்” என்றது- எம்பெருமானே ஸர்வதேவதைகளுக்கும் சரீரியாயிருந்துக்கொண்டு தானே ஸர்வயஜ்ஞ போந்தாவாகிறானென்றவாறு. ஐந்தும் = தேவயஜ்ஞம், பித்ருயஜ்ஞம், பூதயஜ்ஞம், மதுஷ்யயஜ்ஞம், ப்ரஹ்மயஜ்ஞம் என்பவை பஞ்சமஹாயஜ்ஞங்களெனப்படும். பஞ்ச மஹாயஜ்ஞபோந்தா எம்பெருமானென்கிறது. ஐந்தும் = ப்ராண, அபாந, ஸ்வாந, உதாக, ஸாமநங்களென்கிற ஐந்துக்கும் செய்யப்படுகிற பஞ்சாஹுதிகள். “ப்ராணாயஸ்வாஹா” இத்யாதி பஞ்சவாக்யங்களாலே செய்யப்படுகிற ப்ராணாயஸ்வாஹா, அபாநாயஸ்வாஹா” இத்தயாதி பஞ்சாவ்யங்களாலே செய்யப்படுகிற ப்ரணாஹுதிகள் ஐந்தும் அந்தர்யாமியான பரமாத்மாவுக்கச் சேரும் ஆராதகங்களென்க. ஐந்தும் = கார்ஹபத்யம், ஆஹவநீயம், தக்ஷிணாக்கி, ஸப்யம், ஆவஸத்யம் என்பவை பஞ்சாக்கிகள். இந்த பஞ்சாக்கிகளை சரீரமாகக் கொண்டவன் எம்பெருமான் என்கிறது. கார்ஹபத்யம் முதலிய மூன்று அக்நிகளே ச்னெரௌதாக்கிகளாம் என்று ஸத்யாஷாடரும் பரத்வாஜரும் கூறுவர்; ஸப்யம், ஆவஸத்யம் என்ற இரண்டையும் கூட்டிப் பஞ்சாக்கிகளென்பர் மற்ற ஸூத்ரகாரர்கள்; ப்ரஹ்மணர்க்கு முதல் மூன்று அக்நிகளேயாமென்பது ஹிரண்ய கேசிமதம். ஏறு சீரிரண்டும் = “மாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு” என்றபடி* ஒண்தாமரையாள் கேழ்வனொருவனையே நோங்குமுணர்வான ஜ்ஞாநமும் கடையறப்பாசங்கள் விடுகையாகிற விரக்தியும், ஸகலசாஸ்த்ரங்கட்கும் இவ்விரண்டில்தான் முக்கிய நோக்காதலால் ஏறுநீர் எனச் சிறப்பித்துக் கூறப்பட்டதென்க. மூன்றும் = முற்கூறிய ஜ்ஞாநவிருக்திகளில் பயனாக விளைகின்ற பரபக்தி பரஞ்ஞாந பரமபத்திகள்,அன்றியே, உபாஸநபலமான ஐச்வர்ய, கைவல்ய, பகவத்ப்ராப்திகளாகவுமாம். இவற்றைக் கொடுப்பவன் எம்பெருமான் என்பது ஸாமாநாதிகரயணத்தின் கருத்து.

English Translation

You became the Six, the Six, the six and Five, the Five, the Five; O, the Two and Three and Seven and the Six and Eight delights. You became the schools of thought and truth and untruth all in one. O Wonder lord now you became the taste and sound and sensations.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்