விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அன்னமும் மின் உருவும் ஆளரியும் குறளும்*  ஆமையும் ஆனவனே! ஆயர்கள் நாயகனே! 
    என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை*  ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று* 
    அன்னநடை மடவாள் அசோதை உகந்த பரிசு*  ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்* 
    இன்னிசை மாலைகள் இப் பத்தும் வல்லார்* உலகில்- எண்திசையும் புகழ் மிக்கு இன்பம் அது எய்துவரே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அன்னமும் - ஹம்ஸரூபியாயும்
மீன் உருவும் - மத்ஸ்ய ரூபியாயும்
ஆல் அரியும் - நிரஸிம்ஹரூபியாயும்
குறளும் - வாமநிரூபியாயும்
ஆமையும் - கூர்மரூபியாயும்

விளக்க உரை

உரை:1

(அன்னமும்) பிரமதேவனிடத்திலிருந்து வேதங்களைக் கொள்ளைகொண்டு கடலில் மூழ்கி மறைந்து உலகமெங்கும் பேரிருளை மூட்டி நலிந்த மது கைடபர்களைக் கடலினுள்ளுக்குக் கொன்று வேதங்களை மீட்டுக் கொணர்ந்தது ஹம்ஸரூபியாய்ப் பிரமனுக்கு உபதேசித்த வரலாறு அறிக. (மீனுருவம்) பிரமதேவன் முகங்களினின்று வெளிப்பட்டுப் புருஷரூபத்துடன் உலாவிக் கொண்டிருந்த நான்கு வேதங்ஙகளையும் சோமுகனென்ற அசுரன் கவர்ந்துகொண்டு பிரளய வெள்ளத்தினுள் மறைந்து செல்ல அதனை உணர்ந்து திருமால் ஒரு பெருமீனாகத் திருவவதரித்து அப்பெருங்கடலினுள் புக்கு அவ்வசுரனைத் தேடிப்பிடித்துக் கொன்று முன்பு அவன் கவர்ந்து சென்ற வேதங்களை மீட்டுக் கொணர்ந்து அவற்றைப் பிரமனுக்குக் கொடுத்தருளினனென்ற வரலாறு காண்க. (ஆளரியும்) ஸ்ரீப்ரஹ்லாதாழ்வானைப் பலபடிகளால் நலிந்த ஹிரண்யனை முடிக்க நரஸிம்ஹரூபியாய் அவதரித்த கதை ப்ரஸித்தம். (குறளும்) மஹாபலியின் மிடுக்கைக் குலைப்பதற்காக வாமந வேஷம்பூண்டு யஜ்ஞவாடத்தேறச் சென்ற வரலாறும் பிரசித்தம். (ஆமையுமானவனே) முன்னொரு காலத்தில் இவ்வண்ட கோளத்திற்கு அப்புறத்திலுள்ள விஷ்ணுலோகத்திற்குச் சென்று திருமகளைப் புகழ்ந்துபாடி அவளால் ஒரு பூமாலை பிரஸாதிக்கப்பெற்ற ஒரு வித்யாதரமகள் மகிழ்ச்சியோடு அம்மாலையைத் தன் கைவீணையில் தரித்துக்கொண்டு ப்ரஹ்ம லோகவழியாய் மீண்டுவருகையில் துர்வாஸமஹாமுனி எதிர்ப்பட்டு அவளை வணங்கித் துதிக்க அவ்விஞ்சைமங்கை அம்மாலையை அம்முனிவனுக்கு அளித்திட்டான்; அதன் பெருமையை உணர்ந்து அதனைச் சிரமேற்கொண்ட அம்முனிவன் ஆநந்தத்தோடு தேவலோகத்திற்கு வந்து அப்பொழுது அங்கு வெகுஉல்லாசமாக ஐராவத யானையின்மேற் பவனி வந்துகொண்டிருந்த இந்திரனைக் கண்டு அவனுக்கு அம்மாலையைக் கை நீட்டிக்கொடுக்க அவன் அதனை அங்குசத்தால் வாங்கி அந்த யானையின் பிடரியின் மேல் வைத்தவளவில் அம்மத விலங்கு அதனைத் துதிக்கையாற் பிடித்து இழுத்துக் கீழெறிந்தது. காலால் மிதித்துத் துவைத்தது; அது கண்டு முனிவரன் கோபங்கொண்டு இந்திரனை நோக்கி “இவ்வாறு செல்வச் செருக்குற்ற நினது ஐச்வர்யங்களெல்லாம் கடலில் ஒளிந்துவிடக் கடவன” என்று சபிக்க உடனே தேவர் செல்வம் யாவும் ஒழிந்தன; ஒழியவே அசுரர் வந்து பொருது அமரரை வெல்வாராயினர்; பின்பு இந்திரன் தேவர்களோடு திருமாலைச் சரணடைந்து அப்பிரான் அபயமளித்துக் கட்டளை இட்டபடி அசுரர்களையும் துணைக்கொண்டு மந்தரமலையை மத்தாகக் கட்டி வாசுகியென்னும் மஹாநாகத்தைக் கடைகயிறாகப் பூட்டிப் பாற்கடலைக் கடையலாயினர்; அப்பொழுது மத்தாகிய மந்தரகிரி கடலினுள்ளே அழுந்திவிட தேவர்கள் வேண்டுகோளினால் திருமால் பெரியதோர் ஆமைவடிவமெடுத்து அம்மலையின் கீழே சென்று அதனைத் தனது முதுகின் மீது கொண்டு தாங்கி அம்மலை கடலில் அழுந்திவிடாமற் கடைதற்கு உபயோகமாம்படி அதற்கு ஆதாரமாக எழுந்தருளியிருந்தனனென்பது வரலாறு. மிக்கின்பம் = தொகுத்தல் விகாரமெனக் கொண்டு மிக்க + இன்பம் என்றும் பிரிக்கலாம்.

உரை:2

அன்னப்பறவையாய் அவதரித்து வேதங்களுரைத்தவனே; மீனாய் அவதரித்து மறைகளை மீட்டவனே; நரசிம்மனாய் வந்து நாராயண நாமம் நிலைநிறுத்தினவனே; வாமனனாய் வந்து விண்ணைத்தாண்டி அளந்தவனே; ஆமையாய் வந்து அமரர்களுக்குதவியவனே;எங்கள் ஆயர்குலத் தலைவனே, என்பால் இரங்கமாட்டாயா? என் துயரங்களைய மாட்டாயா? ஏழுலகுங் கொண்டவனே இந்த ஏழையின் உள்ளங்குளிர, கண்கள் களிக்க நீ செங்கீரை ஆடமாட்டாயா?அன்னமென மெல்ல நடை புரியும் யசோதை அன்னையான, புதுவை நகர் வாழ் இந்த பட்டனின் பரிசான இந்த பத்து, இன்றமிழ் இன்னிசை பாக்களைப் பாட மனமுள்ளவர்கள், பாடவல்லவர்கள் உலகின் எட்டுத்திக்கும் புகழ் பெற்று, எல்லையில்லா இன்பம் பெறுவரே.

 

 

English Translation

This decad of sweet Tamil songs by Pattarbiran of Puduvai singh the prized words of swan-gaited Yasoda to the master of the cowherd clan who came in the Avatars of swan, fish, man-lion, manikin and tortoise saying, “Lord of the seven worlds, dance the Senkirai”. Those who master it will attain great pleasure and win the praise of the eight Quarters.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்