விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துப்பு உடை ஆயர்கள் தம் சொல் வழுவாது ஒருகால்*  தூய கருங்குழல் நற் தோகைமயில் அனைய* 
    நப்பினைதன் திறமா நல் விடை ஏழ் அவிய*  நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே!* 
    தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத்*  தனி ஒரு தேர் கடவித்தாயொடு கூட்டிய*  என்- 
    அப்ப! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை*  ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

துப்பு உடை - நெஞ்சில் கடினத்தன்மையுடையரான
ஆயர்கள்தம் - இடையர்களுடைய
சொல் - வார்த்தையை
வழுவாது - தப்பாமல்
ஒருகால் - ஒருகாலத்திலே

விளக்க உரை

உரை:1

ஸீதா விவாஹத்திற்கு வில்முறியைப் பந்தயமாக வைத்திருந்தது போல நப்பின்னை திருமணத்திற்கு எருதுமுறியைப் பந்தயமாக வைத்திருந்ததும் அப்படியே அவ்வெருதுகள் ஏழையும் வலியடக்கிக் கண்ணபிரான் அவளை மணந்து கொண்டதும் ப்ரஸித்தம். எருதுகளினுடைய முரட்டுத்தனத்தையும் கண்ணபிரானுடைய திருமேனியின் மென்மையையும் நோக்காமல் எருதுகளோடே போர் செய்ய வேணுமென்று விதித்த இடையர்களின் நெஞ்சுரத்தை நினைத்துத் துப்புடையாயர்கள் என்றார். இனி “துப்புடைய” என்ற இவ்விசேஷணத்தை இரண்டாமடியின் முடிவிலுள்ள நாதனுமானவனே! என்றதோடு அக்வயித்து (எருதேழையும் வலியடக்கவல்ல) ஸாமர்த்தியமுடைய கண்ணபிரானே! என்பதாகவும் பொருள்கொள்வர். மிக்க்கொடிய ரிஷபங்களை ‘நல்விடை’ என்றது கடுவிடமுடைய பாம்பை ‘நல்ல பாம்பு’ என்பதுபோல. மூன்றாமடியிற் குறித்த வைதிகன் பிள்ளைகளை உடலொடுங்கொண்டு கொடுத்த கதை வருமாறு :- ஒரு ப்ராஹ்மணனுக்கு முறையே பிறந்த மூன்று பிள்ளைகள் பிறந்த அப்பொழுதே பெற்றவளுமுட்பட முகத்தில் விழிக்கப்பெறாதபடி இன்னவிடத்திலே போயிற்றாறென்று தெரியாமல் காணவொண்ணாது போய்விடுகையாலே நான்காம்பிள்ளையை ஸ்த்ரீ ப்ரஸவிக்கப் போகின்ற வளவிலே அந்த அந்தணன் கண்ணபிரானிடம் வந்து இந்த ஒரு பிள்ளையையாயினும் தேவரீர் பாதுகாத்துத் தந்தருளவேண்டும் என்று ப்ரார்த்திக்க கண்ணன் அப்படியே செய்கிறேன் என்று அநுமதி செய்தபின்பு ஒரு யாகத்தில் தீக்ஷிதனாயுள்ள கண்ணபிரான் எழுந்தருளக் கூடாதென்பது பற்றி அர்ஜுனன் நான் போய் ரக்ஷிக்கிறேன் என்று ப்ரதிஜ்ஞை செய்து ப்ராஹ்மணனையும் கூட்டிக்கொண்டு போய் ப்ரஸவக்ருஹத்தைச் சுற்றும் காற்று முட்பட ப்ரவேசிக்கவொண்ணாதபடி சாக்கூடங்கட்டிக் காத்துக் கொண்டு நிற்கையில் பிறந்தபிள்ளையும் வழக்கப்படி பிறந்தவளவிற் காணவொண்ணாது போய்விடவே ப்ராஹ்மணன் வந்து அர்ஜுனனை மறித்து க்ஷத்ரியாதமா! உன்னாலன்றோ என்பிள்ளை போம்படியாயிற்று; கண்ணன் எழுந்தருளிக் காப்பதை நீயன்றோ கெடுத்தாய் என்று நிந்தித்துக் கண்ணன் பக்கலிலே இழுத்துக்கொண்டு வர கண்ணபிரான்கண்டு புன்சிரிப்புக் கொண்டு அவனை விடு; உமக்குப் பிள்ளையை நான் கொணர்ந்து தருகிறேன் என்றருளிச் செய்து ப்ராஹ்மணனையும் அர்ஜுனனையும் தன்னுடன் கொண்டு தேரிலேறி அர்ஜுனனைத் தேர் செலுத்தச் சொல்லி அத்தேர்க்கு இவர்கட்கும் திவ்யரஸத்தியைத் தன் ஸங்கல்பத்தால் கல்பித்து இவ்வண்டத்துக்கு வெளியே நெடுந்தூரமளவும் கொண்டுபோய் அங்கு ஓரிடத்தில் தேருடனே இவர்களை நிறுத்தி தேஜோ ரூபமான பரமபதத்திலே - தன் நிலமாகையாலே தானே போய்ப்புக்கு அங்கு நாய்ச்சிமார் தங்கள் ஸ்வாதந்தர்யங் காட்டுகைக்காவும் கண்ணபிரானுடைய பிள்ளைகள் நால்வரையும் அங்கு நின்றும் பூர்வரூபத்தில் ஒன்றுங்குலையாமற் கொண்டுவந்து கொடுத்தருளினனென்ற வரலாறு அறிக. தப்பினபிள்ளைகளைத் தாயொடு கூட்டிய என்று இயையும். தனிமிகு சோதிபுக என்ற பாடத்தை மறுக்க.

உரை:2

வலிமை நிறைந்த, திறமைசாலிகளான ஆயர்கள் முன்னம் ஒரு காலத்தில் சொல்லி வைத்த சொல் மாறாமல், அவர்கள் வாக்குப்படியே நடந்து கொண்ட நம் கண்ணபிரான்.... அடியவர்கள் வேண்டுகோள் அனைத்தையும் மதித்து நடப்பவன், அவர்கள் துயர் தீர்ப்பவன்- நம்பிரான். இப்ப என்ன வம்பு வந்துச்சு?? யாருக்கு என்ன ஆச்சு?மயிலின் நீண்ட தோகையைப் போன்ற பொலிவான நீண்ட கருங்கூந்தலையுடையவளான நப்பின்னையின்; தோகை மயிலினைப் போன்ற சாயலுடைய நப்பின்னை.நப்பின்னையின் தந்தைக்குச் சொந்தமான வலிமை மிகுந்த, ஏழு காளைகளை ஒடுக்கிய வல்லமையுடைய தலைவனே! காணாமல் சென்ற பிள்ளைகளை எல்லாம் தனியொரு ஆளாகச் சென்று மீட்டுவந்து, அவர்கள் தாயிடம் சேர்ப்பித்த என் அப்பனே!எனக்காக ஒரு முறை செங்கீரை ஆடுவாயாக! வலிமை மிகுந்த காளையைப் போன்றவனே எனக்காக ஒரு முறை செங்கீரை ஆடுக ஆடுகவே!

English Translation

n the contest held by the cowherd flok, you won the hand of dark-coiffured Nappinnai of beauty matching a peacock, by subduing seven fierce bulls. O Lord, you brought back the lost sons of the Brahmin from the world of eternal light in a golden chariot, and returned them to their mother, dance! Dance the Senkirai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்