விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பிறை ஏறு சடையானும்*  பிரமனும் இந்திரனும்*
    முறையாய பெரு வேள்விக்*  குறை முடிப்பான் மறை ஆனான்*
    வெறியார் தண் சோலைத்*  திருவேங்கட மலைமேல்*
    நெறியாய்க் கிடக்கும்*  நிலை உடையேன் ஆவேனே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பிறை ஏறு சடையானும் - இளஞ் சந்திரன் ஏறியிரா நின்ற ஜடையையுடைய சிவனும்;
பிரமனும் - ப்ரஹ்மாவும்;
இந்திரனும் - தேவேந்திரனும்;
முறை ஆய - தம் தமது யோக்யதைக்குத் தக்கபடி செய்கின்ற;
பெரு வேள்வி - பெரிய பாகங்களின் பயனாக;

விளக்க உரை

உரை:1

கீழ்ப்பாட்டில் ” கானாறாய்ப்பாயுங் கருத்துடையேனாவேனே ” என்று பாரித்தவர் சற்று ஆராய்ந்ததில் அது தன்னிலும் ஓர் குறையுணர்ந்தார்; ஆறு எப்போதும் ப்ரலஹிக்கக் கூடியதல்ல. சில காலங்களில் வற்றிப்போம்; அப்போது திருமலை வாழ்ச்சி இழந்ததாம் என நினைத்தார். அங்ஙனமன்றி எப்போதும் ஒரு தன்மையாகத் திருவேங்கட முடையானை ஸேவிக்கவருகின்ற பாகவதர்களின் ஸ்ரீபாததூளி படும்படி வழியாய்க் கிடக்கும் நிலைமை தமக்கு வாய்க்க வேண்டுமென்று பிரார்த்திக்கின்றார் இதில். குறை முடிப்பான்-இது இரட்டுற மொழிதலாய், குறையைத் தீர்ப்பவன், வேண்டுகோளைப் பூர்த்தி செய்பவன் எனப் பொருள்தரும். அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்டப்ராப்தியும் செய்பவன் என்கை.

உரை:2

பிறையினை தன் சடையில் வைத்திருக்கும் சிவபெருமானும் பிரமனும் இந்திரனும் முறையுடன் உன்னை வேண்டிச் செய்யும் பெரும் வேள்விகளுக்கான பயன்களைத் தந்து அவர்களின் குறை தீர்ப்பாய். அவர்கள் முறை என்ன என்று அறியும் வகை சொல்லும் வேதங்களாய் நின்றாய். நறுமணம் கமழும் குளிர்ந்த சோலைகளைக் கொண்ட திருவேங்கட மலை மேல் அடியவர்கள் உன் திருக்கோயிலை அடையும் வழியாகக் கிடக்கும் நன்னிலை உடையவன் ஆவேனே.

English Translation

The Lord who is the substance of the Vedas, grants to Brahma, Siva and Indra the fruits of their sacrifices. He is the resident of Venkatam hills, where I wish to be a footpath amid the cool enchanting groves.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்