விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உய்ய உலகு படைத்து உண்ட மணிவயிறா *  ஊழிதொறு ஊழி பல ஆலின் இலையதன்மேல்* 
    பைய உயோகு-துயில் கொண்ட பரம்பரனே!*  பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே!*
    செய்யவள் நின் அகலம் சேமம் எனக் கருதி*  செல்வு பொலி மகரக் காது திகழ்ந்து இலக* 
    ஐய! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை*  ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.(2)  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உய்ய - (ஆத்மாக்கள்) உஜ்ஜீவிக்கைக்காக
உலகு - லோகங்களை
படைத்து - ஸ்ருஷ்டித்து
உண்ட - உள்ளேவைத்து ரக்ஷித்த
மணி வயிறா - அழகிய வயிற்றையுடையவளே

விளக்க உரை

உரை:1

மஹாப்ரளப் பெருங்கடலானது இவ்வுலகங்கள் எல்லாவற்றையும் முடித்தபின்பு இவ்வுலகத்து உயிர்கள் எல்லாம் மூ­லப்பிரக்ருதியில் அழுந்திக் கிடக்க அப்போது எம்பெருமான் ‘நித்யஸூரிகளைப் போல நிம்மை அநுபவித்து நித்ய கைங்கரியஞ் செய்துகொண்டு வாழவேண்டிய இவ்வுயிர்கள் கைகால் முதலிய உறுப்புகள் ஒன்றுமின்றி இறகொடிந்த பக்ஷிபோல் கிடக்கின்றனவே!’ என்று வியாகுலப்பட்டுக் கருணைகொண்டு கைகால் உடம்பு முதலியவற்றைக் கொடுத்துத் தன்னை யடையுமாறு சாஸ்த்ரங்களையங் கொடுத்தருளினன் என்பது அறியத்தக்கது. அவாந்தர ப்ரளயத்தில் உலகங்கள் அழியாதபடி அவற்றையுண்டு வயிற்றில் வைத்துப் பாதுகாப்பதனால் உண்ட மணிவயிறா! என்றார். உலகங்களை எல்லாம் ரக்ஷிப்பதற்கான உபாயத்தைச் சிந்தனை செய்துகொண்டு உறங்குவான்போல் இருக்குமிருப்பு ‘யோகநித்ரை’ எனப்படும். அதுவே இங்கு உயோகுதுயில் எனப்பட்டது. யோகம் என்னும் வடசொல் உயோகு எனத் திரிந்தது. ‘பராத்பர:’ என்னும் வடசொல் தொடர் பரம்பரன் என வந்தது; உயர்ந்தவர்களான தேவதைகளிற் காட்டிலும் மிக உயர்ந்தவன் என்றபடி. செங்கீரை ஆடும்போது திருமார்வில் உறையும் பிராட்டிக்கு அசைதல் உண்டாகாதபநா ஸாவதாநினாய் ஆடவேணும் என்பாள் செய்யவள் நின்னகலஞ் சேமமெனக்கருதி என்கிறாள். ஸாக்ஷாத் திருமகள் கொழுநனே கண்ணபிரானாக வந்து பிறந்திருக்கின்றமை நின்கு வெளியிடப்பட்டதென்க. சேமம் - க்ஷேமமென்னும் வடசொல் விகாரம். மகரக்காது என்றவிடத்து மகரமென்னுஞ் சொல் அதன்வடிவத்தை உடைய குண்டலத்திற்கு ஆகுபெயர்.

உரை:2

இவ்வுலகம் தோன்றிய காலத்திற்கு முன்னமிருந்தே, எண்ணிலடங்கா யுகங்களாக, உலகிலுள்ள அனைத்து உயிரினங்கள் மற்றும் உயிரற்ற பொருள்கள் அனைத்தையும் உருவாக்கியதோடு மட்டுமல்லாது, ஊழிப் பேரழிவின் போது அவற்றையெல்லாம் தன் அழகிய வயிற்றினுள் வைத்து பாதுகாக்கின்ற பரம்பொருளே! சின்னஞ்சிறிய ஆலிலை மேல் மெல்ல சயனித்து அறிதுயில் கொண்ட முழுமுதற் கடவுளே.வெண்தாமரை இதழ்களைப் போல் நீண்ட கண்களையுடைய கருமேக தேகங்கொண்டவனே நின் சின்னஞ்சிறு காதுகளில், விளக்கமாய் அமைந்து, மிகுவாய் பொலிகின்ற அந்த அழகிய குண்டலங்கள் அசைந்து ஆடும் வண்ணம், உன் இதயத் தாமரையில், என்றும் நீக்கமற நிறைந்துள்ள திருமகளை எண்ணிக் கொண்டே அசைந்தாடுவாயாக நின் சின்னஞ்சிறு காதுகளில், விளக்கமாய் அமைந்து, மிகுவாய் பொலிகின்ற அந்த அழகிய குண்டலங்கள் அசைந்து ஆடும் வண்ணம், உன் இதயத் தாமரையில், என்றும் நீக்கமற நிறைந்துள்ள திருமகளை எண்ணிக் கொண்டே அசைந்தாடுவாயாக

 

English Translation

O,Jewel-bellied god-of-gods, who creates and swallows the worlds! For many, many ages you lie motionless on a fig leaf performing the Yoga of sleep. O, Lord of dark hue and large lotus eyes! Goddess Lakshmi considers your large chest a befitting place for her. O, Bull of the cowherd clan, dance. Your golden Makara earrings swaying from side to side, dance the Senkirai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்