விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நல்ல என் தோழி!*  நாகணைமிசை நம்பரர்* 
    செல்வர் பெரியர்*  சிறு மானிடவர் நாம் செய்வதென்?* 
    வில்லி புதுவை*  விட்டுசித்தர் தங்கள் தேவரை* 
    வல்ல பரிசு வருவிப்பரேல்*  அது காண்டுமே*  (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என்நல்லதோழி! - எனது உயிர்த்தோழியே,
நாக அணைமிசை - திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே சயனித்திருக்கிற
நம் பரர் - நம்பெருமாள்
சிறு மானிடவர் - க்ஷுத்ர மநுஷ்யரா யிராநின்றோம் (இப்படிப்பட்டநாம)
என் செய்வது - என்ன செய்யலாம்?
வில்லி புதுவை விட்டுசித்தர் - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு நிர்ஹகரான பெரியாழ்வார்

விளக்க உரை

ஆண்டாள் இப்படி பகவத்விரஹத்தாலே ஆற்றமாட்டாதாளாய்ப்படுகிற அலமாப்பைக் கண்ட உயிர்த்தோழியானவள். ‘ஐயோ! இவள் இப்பாடுபடுகின்றாளே! இவளை நாம் எப்படித் தேற்றுவிப்பது! ஒருவழியும் தெரியவில்லையே! என்று சிந்தித்து வ்யஸநித்திருக்கையில், ஆண்டாள் அவ்வுயிர்த்தோழியைநோக்கி ‘நீ அஞ்சவேண்டா; ஜீவிப்பதற்கு ஒருவழி கண்டேன்காண்‘ என்கிறாள். திருவனந்தாழ்வான்மேல் ஸயனித்தருளுமவராய் ஸ்ரிய பதியாய்ப் பரம புருஷராயிருக்கிறவரை அதிக்ஷுத்ரராயிருக்கிற நாம் எங்ஙனே அணுகமுடியும்? “அம்மானாழிப்பிரானவன் எவ்விடத்தான்யானார்?“ என்னுமாபோலே அவருடைய பெருமைக்கும் நம்முடைய சிறுமைக்கும் எவ்வளவோ வாசியுண்டாயிருக்க அவரை நாம் வளைப்பிடமுடியுமோ? முடியாது. ஆகில் நாம் இழந்தேபோகவேண்டியதேர்வென்னில், இழவாமைக்கு ஒருவழியுண்டு; அப்பெரியவர் நமக்குவசப்படமாட்டாராயினும் நம் அண்ணலான் பெரியாழ்வார்க்கு வசப்படாதிருக்க அவரால் முடியாது. அந்த நாகணைமிசைநம்பரர் தாமே பெரியாழ்வாரிடத்தில் கோற்கீழ்க்கன்றாயிருப்பர். “பூச்சூட்டவாராய்“ என்றும் “நீராடவாராய்“ என்றும் “காப்பிடவாராய்“ என்றும் அவர் அழைத்தவாறே அப்பெரியவர் பதறி ஓடி வருவர்; அப்போது நாம் எளிதாக அவரை ஸேவிக்கப் பெறுவோமென்கிறாள்.

English Translation

My Good Sister! Our Lord, who reclines on the serpent conch, is rich and powerful. What can we small mortals do? When Villiputtur’s Vishnuchitta, our Father, welcomes his Lord with proper presents, we shall see him then.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்