விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்*  ஏழ்படிகால் தொடங்கி*
    வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்*  திரு வோணத் திருவிழவில் 
    அந்தியம் போதில் அரியுரு ஆகி*  அரியை அழித்தவனைப்* 
    பந்தனை தீரப் பல்லாண்டு*  பல்லாயிரத் தாண்டு என்று பாடுதுமே 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வந்து - (உரிய காலங்களில்) வந்து;
வழி வழி - முறைதப்பாமல்;
ஆள் செய்கின்றோம் - கைங்கரியம் பண்ணுகிறோம்;
திரு ஓணம் திருவிழவில் - ச்ரவண நக்ஷத்ரமென்கிற திருநாளிலே;
அந்தி அம்போதில் - அழகிய ஸரயம் ஸந்தியாகாலத்தில்;

விளக்க உரை

வாழாட்பட்டு என்று தொடங்கும் மூன்றாம் பாசுரத்திலே ஏழாட்காலும் பழிப்பிலோம் நங்கள் என்று தங்கள் பெருமையைச் சொல்லி அனன்யப் பிரயோஜனர்களை அழைத்தார் அன்றோ. இந்த பாசுரத்திலே அப்படி அழைக்கப் பட்ட அனன்யப் பிரயோஜனர்கள் நாங்களும் உம்மைப் போலவே ஏழு தலைமுறையாக அடிமை செய்து எம்பெருமானுக்கு மங்களாசாசனம் பண்ணுகிறவர்கள் என்று சொல்லி கொண்டு வந்து சேர்ந்ததாக அமைந்த பாசுரம் ஆகும். என் பிதாவும், அவர் பிதாவும், அவர் பிதாவும், அவர் பிதாவும், அவருடைய பாட்டனுமாக ஏழு தலைமுறையாக முறை தவறாமல் கைங்கர்யம் பண்ணுகிறோம். திருவோண நன்னாளிலே அழகிய சாயம் சந்தியா காலத்திலே ந்ருசிம்ஹப் பெருமானாகத் தோன்றி, பக்தப் பிரஹ்லாதனின் பகைவனான இரணியனைக் கொன்ற எம்பெருமானுக்கு மங்களாசாசனம் என்பதாக அமைந்த பாசுரம் ஆகும்.

English Translation

My father’s father’s father’s father and his grandfather before him, over seven generations have performed service to the Lord. In the asterism of sravanam, at dusck, the Lord came as the man-lion and tore apart the foe. End your suffering, join us! Sing ‘Many years, many thousands of years Pallandu’.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்