விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சலங் கொண்டு கிளர்ந்து எழுந்த*  தண் முகில்காள்!*  மாவலியை- 
    நிலங் கொண்டான் வேங்கடத்தே*  நிரந்து ஏறிப் பொழிவீர்காள்* 
    உலங்கு உண்ட விளங்கனி போல்*  உள் மெலியப் புகுந்து* 
    என்னை நலங் கொண்ட நாரணற்கு*  என் நடலைநோய் செப்புமினே*       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சலம் கொண்டு - ஸமுத்ரஜலத்தை முகந்து கொண்டு
கிளர்ந்து எழுந்த - மேற்கிளம்பி விளங்குகின்ற
தண் முகில் காள் - குளிர்ந்த மேகங்களே!
மா வலியை - மஹாபலியிடமிருந்து
நிலம கொண்டான் வேங்கடத்து - பூமியை ஸ்வாதீநப்படுத்திக்  கொண்டவனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற திருமலையிலே

விளக்க உரை

உரை:1

இதிலும் முன்னடிகளிரண்டும் மேகவிளி. ‘கடலில்நீரை முகந்துகொண்டு கிளம்பின குளிர்ந்த மேகங்களே! என்றது - உங்களுடைய வடி வழகும் குளிரிச்சியுமெல்லாம் போக்யமாகத்தானிருக்கிறது, அதில் ஒரு குறையில்லை என்றபடி பின்னை எந்த அம்ஸத்தில் குறையுள்ளதென்றால், அதுதோன்றச் சொல்லுகிறாள் “மாவலியை நிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்தேறிப் பொழிவீர்காள்!“ என்று. ப்ரயோஜநாந்தரபரரான தேவர்களுக்காத் தன்னை யாசகனாக்கிக் காரியம்செய்த பெருமான் எழுந்தருளியிருக்கிற தேஸத்திலே வர்த்திக்கிற நீங்கள் அநந்யப்ரயோஜநையான் எனக்காகக் காரியஞ்செய்ய வேண்டாவா? எம்பெருமான் அஸுரன் பக்கலிலேபோய்க் காரியம் செய்ததுபோல் நீங்களும் ஒரு அஸுரன் பக்கலிலேபோய்க் காரியஞ் செய்ய வேணுமென்று நான் சொல்லுகிறேனோ? உடையவன் பக்கலிலேயன்றோ உங்களைப் போகச்சொல்லுகிறேன். என் காரியத்தைச் செய்யாதது உங்களுக்குக் குறையன்றோ என்கை. “(ஏறிப் பொழிவீர்காள்!) சாய்கரத்தை உயரவைத்துத் தண்ணீர்வார்ப் பாரைப்போலே, காணவே விடாய்கெடுப்படி உயரவேறி வர்ஷிக்கிறிகோளிறே, அவன் வர்த்திக்கிற தேஸித்திலே வர்த்தித்து அவனோடே உங்களுக்கு ஒரு ஸம்பந்தமுண்டானால் அவன் ஸ்வபாமுண்டாக வேண்டாவோ?“ என்பது வியாக்கியன் ஸ்ரீஸூக்தி.

உரை:2

நீரைக் கொண்டு மேலே விளங்குகிற மேகங்களே மஹாபலியிடம் நிலத்தை கேட்டுப் பெற்றுக்கொண்டவன் இருக்கும் திருமலையில் மீதேறிப் பறந்து மழை பொழிபவர்களே!. நான் உலங்கு உண்ட விளாம்பழம் போல் உள்மெலியும்படி என்னுள்ளே புகுந்து என் பெண்மையை உண்டு நலியச் செய்தான். விளாம்பழத்திற்கு ஒரு வகை கொசுவால் நோய் வருகிறது என்று கூறுவதை உணர்ந்து, அவரின் நுண்ணிய அறிவை வியப்பதா ? அல்லது அந்த கொசு விளாம்பழத்தில் மொய்த்தவுடன் அப்பழத்தில் சாறெல்லாம் வற்றிவிடுவதை, நாராயணன் இவள் நினைவில் புகுந்து, பெண்மையை உண்டு நலியச் செய்தான் என்ற உவமையை வியப்பதா ?

English Translation

O Cool dark clouds, laden with water! Go and pour over Venkatam, then tell him of my woe. He, -- the Lord who took the Earth from Bali, -- has dried me, like a wood-apple dried by hovering fruit files.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்