விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    விண் நீல மேலாப்பு*  விரித்தாற்போல் மேகங்காள்* 
    தெண் நீர் பாய் வேங்கடத்து*  என் திருமாலும் போந்தானே?* 
    கண்ணீர்கள் முலைக்குவட்டிற்*  துளி சோரச் சோர்வேனைப்* 
    பெண் நீர்மை ஈடழிக்கும்*  இது தமக்கு ஓர் பெருமையே?*  (2)   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விண் - ஆகாசம் முழுவதிலும்
நீலம் மேலாப்பு விரித்தால் போல் - நீல நிறமான மேற்கட்டியை விரித்துக்கட்டினாற் போலிரா நின்ற
மேகங்காள்! - மேகங்களே!
தெள் நீர் பாய் - தெளிந்த தீர்த்தங்கள் பாயுமிடமான
வேங்கடத்து - திருவேங்கடமலையிலெழுந்தருளி யிராநின்ற

விளக்க உரை

ஆசாசப்பரப்பு முழுவதும் இடமடையம்படி நீலநிறமாயிருப்பதொரு மேற்கட்டி கட்டினாற்போன்ற மேகங்களே! என் திருவேங்கடமுடையானும் உங்களோடு இவ்விட்ட மெழுந்தருளிளானோ? என்று ஆண்டாள் மேகங்களை நோக்கிக்கேட்க, அதற்கு அவைமறுமொழி யொன்றுஞ் சொல்லாதொழியவே, ‘அவன் வராமையாலன்றோ இவை பேசாதிருக்கின்றன‘ என்று கண்ணீர் வெள்ளமிடத்தொடங்க, ‘மேகங்களே! இப்படி நான் கண்ணீர்விட்டு அழும்படி அவன் என்னைப் பரிதாபப்படுத்துவது அவனுடைய பெருமைக்கு ஏற்குமோ? நீங்களே சொல்லுங்கள் என்கிறாள். திருவேங்கடமுடையானும் தானுமாக ஒரு படுக்கையிற் கிடந்து லீலா ரஸம் அநுபவிக்கும் போதைக்கு ஆகாசத்தில் காளமேகங்களின் பரப்பானது மேற்கட்டி கட்டினாற்போலத் தோற்ற விண்ணீலமேலாப்பு விரிந்தாற்போல் மேகங்காள்! என்கிறாள். திருவேங்கடவன் முன்பு இவளோடு புணரவந்தபோது பிராட்டியுந் தானமாக வந்தமை தோன்றுமாம் என்திருமாலும் என்றதனால்.

English Translation

O Dark clouds spreading like a blue canopy over the sky! Does my Tirumal, --Lord of streaming Venkatam, --come with you? I swoon with tears flowing down my swollen breasts. Alas does he pride himself in destroying a maiden’s charm?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்