விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தட வரையின் மீதே*  சரற்கால சந்திரன்* 
    இடை உவாவில் வந்து*  எழுந்தாலே போல்*
    நீயும் வட மதுரையார் மன்னன்*  வாசுதேவன் கையில்* 
    குடியேறி வீற்றிருந்தாய்*  கோலப் பெருஞ் சங்கே!*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கோலம் பெருசங்கே - அழகியபெரிய சங்கே;
சாற்காலம் சந்திரன் - சரத்காலசந்திரன்;
உவா இடையில் - பௌர்ணமியினன்று;
தட வரையின் மீதுவந்து எழுந்தால்போல - பெரிய உதயகிரியிலே வந்து உதித்தாற்போல; 
வடமதுரையார் மன்னன் வாசு தேவன்கையில் - வடமதுரையிலுள்ளார்க்கு அரசானான கண்ணபிரானுடையத் திருக்கையில்

விளக்க உரை

உரை:1

சரத்காலத்தில் எல்லாக்கலைகளும் நிரம்பின பூரணசந்திரன் உதயகிரியின் மேல் வந்து தோற்றினாற்போலே, ஸ்ரீபாஞ்சஜந்யமே! நீயும் கண்ணபிரானது, திருக்கையின்மேலே அழகாகவீற்றிருந்து தோற்றாநின்றாய், உனது பெருமையே பெருமையென்று கொண்டாடுகிறாள். எம்பெருமானுடைய திருக்கை தடவரையாகவும், திருச்சங்காழ்வான் சரத்கால சந்திரமண்டலமாகவும் உருவகப் படுத்தப்பட்டிருக்கின்றமை அறிக. உவா என்று - அமாவாஸ்யைக்கும் பௌர்ணமிக்கும் பெயர், இங்கு பௌர்ணமி விவக்ஷிதம், இடை உவாவில் - உவாவிடையில் - பௌர்ணமியிலே என்கை. இனி, உவர் என்று கடலுக்கும் பெயருண்டாதலால், ‘கடலிலையில் நின்றும் தடவரையின்மீது எழுந்தாற்போல‘ என்றுமுரைக்கலாமாயினும் சுவைகுன்றும். சரற்கால சந்திரன் - வடசொல்தொடர். வாசுதேவன் என்றது - வஸுதேவருடைய புத்திரன் என்றும் எங்கும் நிறைந்துறையுங் கடவுள் என்றும் பொருள்படும்.

உரை:2

அழகிய சங்கே!. ஐப்பசி கார்த்திகை மாதங்களில் ( சரற்காலம் )பெளர்ணமியன்று பெரிய மலையில் சந்திரன் உதயமாகி ஒளி விடுவது போல, வட மதுரை அரசன் கண்ணன் திருக்கையில் நீயும் குடி புகுந்து, நீ எனக்கு அவன் வாய்ச்சுவையைக் குறித்துக் கூற வேண்டும் ( கண்ணனை விட்டு அகலாது எப்போதும் இருக்கும் பெருமை மட்டுமா இதற்கு உண்டு, அவன் வாய்ச்சுவை அறிந்த பெருமையும் அதற்குண்டு.

English Translation

O Beautiful Conch! Like the full moon in the autumnal Sarat season, risen high over the tall Udayagiri mount, you are perched on the shoulder of Vasudeva, our king of Mathura.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்