விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    விண்ணுற நீண்டு அடிதாவிய மைந்தனை*  வேற் கண் மடந்தை விரும்பி* 
    கண்ணுற என்கடல் வண்ணனைக் கூவு*  கருங்குயிலே! என்ற மாற்றம்* 
    பண்ணுற நான்மறையோர் புதுவை மன்னன்*  பட்டர்பிரான் கோதை சொன்ன* 
    நண்ணுறு வாசக மாலை வல்லார்*  நமோ நாராயணாய வென்பாரே!* (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வேல் கண் - வேல்போன்ற கண்களையுடையளாய்
மடந்தை - பெண்மைக்கு உரிய குணங்கள் நிறைந்தவளாய்
சொன்ன - அருளிச்செய்த
நண்ணுறு வாசகம் மாலை - போக்யமான (இந்த) ஸ்ரீ ஸூக்திமாலையை
வல்லார் - ஓதவல்லவர்கள்
‘நமோநாராயணாய்‘ என்பர் - எம்பெருமானுக்கு அந்தரங்க கிங்கரராகப்பெறுவர்கள்

 

விளக்க உரை

இத்திருமொழியை ஓதவல்லவர்கள் ஸ்வரூபமான புருஷார்த்தத்தை பெறுவர்களென்று பலஞ்சொல்லி முடிக்கிறது இப்பாட்டு. “வேங்கடவனைவிரும்பி“ என்றாவது “சங்கொடுசக்கரத்தானை விரும்பி“ என்றாவது “பவளவாயனைவிரும்பி“ என்றாவது அருளிச்செய்யாமல் “விண்ணுற நீண்ட்டிதாவிய மைந்தனை விரும்பி“ என்றதற்குக்கருத்து - ஒருவரிடத்தில் ஒன்றைக்கொள்ளநினைத்தால் பின்பு அவர்களுக்கு ஒன்றும் மிகுந்திருக்கவொண்ணாதபடி ஸர்வாங்கசுத்தி பண்ணுகிறவனையாயிற்று நான்விரும்பியது! *இரக்க மண் நொடுத்தவற்கு இருக்க வொன்று மின்றியே பரக்கவைத்தளந்து கொண்ட பற்பபாதனை நான் விரும்புகையாலே ஸர்வத்தையுமிழந்து சந்தியில் நின்று சங்கடப்படவேண்டிற்று என்கை. “வேற்கண்மடந்தை... பட்டர்பிரான்கோதை, விண்ணுற - நீண்டடிதாவிய மைந்தனைக்கண்ணுறவிரும்பி, ‘கருங்குயிலே! என்கடல்வண்ணனைக்கூவு‘ என்ற மாற்றஞசொன்ன நண்ணுறுவர்சக மாலைவல்லார் நமோநாராயணாய வென்பார்“ என்றும் அந்வயமாகலாம். “வேற்கண்மடந்தை கண்ணுறவிரும்பி“ என்றஸ்வாரஸ்யத்தால் - “அவன்றன்னை வேலுக்கு இரையாக்கத்தேடுகிறான்“ என்றருளிச்செய்வர் பெரியவாச்சான்பிள்ளை.

English Translation

These are songs of a beautiful dame desirous of seeing the Lord, addressing the dark Koel to go and call him, sung by Goda, daughter of learned Puduvai town’s King Pattarbiran. Those who master it will say “Namo Narayanaya”.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்