விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பழகு நான்மறையின் பொருளாய்*  மதம் 
    ஒழுகு வாரணம்*  உய்ய அளித்த*  எம் 
    அழகனார்*  அணி ஆய்ச்சியர் சிந்தையுள்* 
    குழகனார் வரில்*  கூடிடு கூடலே!*   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பழகு நால்மறையின் பொருள் ஆய - அநாதியான சதுர் வேதங்களின் உட்பொருளாயிருக்கு மவனாய்
மதம் ஒழுகுவாரணம் உய்ய அளித்த - மத ஜலம் பெருகாநின்ற கஜேந்த்ராழ்வான் (துயர் நீங்கி) வாழும்படிக்ருபை செய்தருளினவனாய்
எம் அழகனார் - எம்மை ஈடுபடுத்தவல்ல அழகையுடையனாய்
அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார் - அழகிய கோபிமார்களின் நெஞ்சினுள்ளே குழைந்திருக்கு மவனான கண்ணபிரான்
வரில் - வரக்கூடுமாகில்

விளக்க உரை

உரை:1

முதலை கோள்விடுத்து கஜேந்திராழ்வானைக் காத்தருளிய அபதாநத்திலே’ ஈடுபட்டுப் பேசுகின்றாள். (வேதைச்ச ஸர்வை ரஹமேவ வேத்ய:) இத்யாதி ப்ரமாணங்களையுட்கொண்டு “பழகு நான் மறையின் பொருளாய்” என்றன். அக்கிநி, இந்திரன், வாயு முதலிய தேவதைகளைப் பற்றியும் வேதங்களில் கர்மகாண்டங்களிலே பரக்கப் புகழ்ந்து பேசப்பட்டிருப்பினும் ‘(அங்காந்யந்யா தேவதா:’) என்று அந்த வேதந்தானே அந்த தேவதைகளை எம்பெருமானுக்கு அவயவபூதங்களாகச் சொல்லிக் கிடக்கையாலே அவயங்களைப் புகழ்ந்து சொல்வதும் அவயவிக்கே அதிசயமாக முடிகையாலே தேவதாந்தர ப்ரசம்ஸாபரமான கர்மகாண்டமும் பகவத்பரமேயாகத் தட்டில்லை யென்க. ‘வேததாத்பர்ய ஸர்வஸ்வம்’ என்னும் நூலிலே இவ்விஷயத்தைப் பரக்கப்பேசியுள்ளோம்’ அங்கே விரியக் கண்டு கொள்க. வாரணம்-தற்சமவடசொல். “வாரணமுய்ய வளித்த வெம்மழகனார்” என்ற சேர்க்கையின்பம் நோக்கி ஒரு கருத்துக் கூறலாம்’ அதாவது-கஜேந்த்ராழ்வானுடைய கூக்குரலைக் கேட்டவுடனே எம்பெருமான் அரைகுலையத் தலைகுலைய விரைந்தோடுங்கால் (ஸ்ரக்பூஷாம் பரமயதாயதம் ததாந:- ஸ்ரீரங்கராஜஸ் தவம் உத்தரசதகம்) என்றபடி ஆடையாபரணம் அலங்கல் முதலியவற்றை ஜல்லாரிபில்லாரியாக அணிந்து கொண்டு புறப்பட்ட அழகு ஆண்டாள் நெஞ்சிலே ஊற்றிருந்து ஈடுபடுத்துகிறபடி.

உரை:2

வேதியர் மீண்டும் மீண்டும் சொல்லிப் பழகும் நான்மறையின் பொருளானவன், மதம் ஒழுகும் கஜேந்திரன் என்னும் யானையின் துயர் தீர்த்து அதை உய்த்தவன், என் அழகன், ஆய்ச்சியர் சிந்தையில் ஆடும் குழகன் அவன் வருவானெனில் நீ கூடிடு கூடலே

English Translation

My handsome one is the sweet sap of the four Vedas. He gave life to the elephant Gajendra in distress. He lives in the hearts of beautiful cowherd-dames. If he will come, then join, O Lord-of-the-circle.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்