விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பேத நன்கறிவார் களோடு இவை*  பேசினால் பெரிது இன்சுவை* 
    யாதும் ஓன்றறியாத பிள்ளைகளோமை*  நீ நலிந்து என் பயன்? 
    ஓதமா கடல் வண்ணா!*  உன் மணவாட்டி மாரொடு சூழறும்* 
    சேது பந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பேதம் - (உன் பேச்சின்) வாசியை
நன்குஅறிவார்களோடு - நன்றாக அறிய வல்லவரோடு
இவை - இப்பேச்சுக்களை
ஓதம் - திரைக்கிளப்பத்தையுடைய
பெரிது இன்சுவை - மிகவும் போக்யமாயிருக்கும்’

விளக்க உரை

உரை:1

கண்ணபிரான் ஆய்ச்சிகளை நோக்கிக் குறும்பாகச் சில வார்த்தைகளைச் சொல்லிச் சிற்றிலழித்து நலிய, அதுகண்ட அவர்கள், ‘அப்பனே! வார்த்தைகளின் வாசியை அறிய வல்லவர்களிடத்தில் இக்குறும்பு வார்த்தைகளைச் சொன்னால், நீ ஒன்று சொல்ல, அவர்கள் ஒன்பது சொல்ல, மேன்மேல் வார்த்தைகள் பெருகிப் பரமரஸமாய்ச் செல்லும்’ கபடமற்ற வார்த்தைகளின் கருத்தையுமறிய மாட்டாத எங்கள் திறத்தில் அப்பேச்சுக்களைப் பேசி நலிவதனால் உனக்கு என்ன பயனுண்டு?’ என்று சொல்லச் செய்தேயும் அவன் தவிராமல் மேன்மேலுஞ் சிற்றிலை சிதைக்கப் புசு, ‘உன் பெண்டாட்டிகளின் மேலாணை, எம்மை நீ நலியலாகாது’ என்கிறார்கள். (“யாதுமொன்றறியாத” இத்யாதி.) ‘தண்ணீர்’ என்றால் தண்ணீரே கொண்டுவரும்படி பாலைகளாயிருக்கிற எங்களை நெருக்கினால் உனக்கு என்ன பலமுண்டு?” என்ற பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தின் வீறு காண்க. ‘தண்ணீர் கொண்டுவா’ என்றால், ‘கலவி செய்ய வா’ என்று விளிக்கிறான் என்று உணருகையே அறிவின் பயன்போலும். ‘உன் மணவாட்டியோடு” என்று ஒருமையாகச் சொல்லாமல், “மணவாட்டிமாரொடு” என்று பன்மையாகக் கூறியது-மருநத்திற்படப் பேசும் பேச்சாம்’ ஏகதாரவ்ரத்னா யிருக்கிறவனை நோக்கி, ‘எங்களை யொழிய உனக்கு எத்தனை பேருண்டு’ என்கை மா;மஸ்பர்சியிறே. சேதுபந்தம் - 

உரை:2

பேச்சும் ஒன்றும் செயல் ஒன்றுமான உன் செயல்களுக்கு வித்தியாசம் நன்கு அறிந்தவர்களோடு இவை பேசினால் பெரிதும் சுவையானதாக இருக்கும் ஆனா இந்தச் சூதுவாது அறியாத பிள்ளைகளான எங்களை நீ துன்புறுத்தி என்ன பயன்
அலை கொண்ட கடல் நிறத்தானே உன் மனைவிகளின் மீது ஆணை அணை கட்டினாய் எங்கள் சிறு வீட்டை வந்து சிதைக்காதே.

English Translation

We are playing in the sand with little round mouthed pots and small winnow plates. Why do you spoil our fun? O Lord of discus, mind you do not touch or kick our castle. Remember, sugar is not sweet when the heart is bitter.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்