விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அண்டக் குலத்துக்கு அதிபதி*  ஆகி அசுரர் இராக்கதரை* 
    இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த*  இருடிகேசன் தனக்கு* 
    தொண்டக் குலத்தில் உள்ளீர் வந்து அடிதொழுது*  ஆயிர நாமம் சொல்லிப்* 
    பண்டைக் குலத்தைத் தவிர்ந்து*  பல்லாண்டு பல் லாயிரத்தாண்டு என்மினே  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அண்டம் குலத்துக்கு அதிபதி ஆகி - அண்ட ஸமூஹங்களுக்கெல்லாம் நியாமகனாய்;
அசுரர் இராக்கதரை - அஸூர ராக்ஷஸர்களுடைய;
இண்டை குலத்தை - நெருக்கமான கூட்டத்தை;
எடுத்து களைந்த - நிர்மூலமாக்கின;
இருடீகேசன் தனக்கு - ஹ்ருஷீகேசனான * பகவானுக்கு;

விளக்க உரை

இந்த பாசுரத்திலே ஐஸ்வர்யார்த்திகளை பல்லாண்டு பாட அழைக்கிறார் ஆழ்வார். இதிலே இரண்டு வகுப்பினர் உண்டு. ஒருவர் புதிதாக செல்வத்தைப் பெற விரும்புவோர்(அண்டக்குலத்துக்கு அதிபதியான இருடீகேசனுக்குத் தொண்டக்குலத்திலுள்ளீர்). மற்றொருவர் இழந்த செல்வத்தை தேடுபவர்(அசுரர் இராக்கதரை இண்டைக்குலத்தை எடுத்துக்களைந்த இருடீகேசனுக்குத் தொண்டக்குலத்திலுள்ளீர்). ஐஸ்வர்யார்த்திகளே – உங்களுடைய பழைய தன்மையை விட்டு(பிரயோஜநாந்தரம்) எங்களோடு சேர்ந்து அண்ட சமூகங்களுக்கெல்லாம் நியாமகனும், அசுர ராக்ஷஷர்களுடைய கூட்டத்தை நிர்மூலமாக்கினவனுமான பகவானுடைய திருவடிகளை சேவித்து, ஆயிரம் திருநாமங்களையும் அனுசந்தித்து மங்களாசாசனம் பண்ணுங்கள் என்று அழைப்பதாக அமைந்த பாசுரம் ஆகும்.

English Translation

Asseting his supremacy over all creation, as Hrisikesa, he destroyed the clannish Asuras and Rakshasas. O Devotees, revere his feet, chanting the thousand names. Give up your old connections and ways and sing ‘Many thousands of years Pallandu’.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்