விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எழில் ஆர் திருமார்வுக்கு*  ஏற்கும் இவை என்று*
    அழகிய ஐம்படையும்*  ஆரமும் கொண்டு*
    வழு இல் கொடையான்*  வயிச்சிரவணன்* 
    தொழுது உவனாய் நின்றான் தாலேலோ* 
    தூமணி வண்ணனே தாலேலோ

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எழில் ஆர் - அழகுமிக்கிருந்துள்ள
திருமார்பிற்கு - வக்ஷஸ்ஸ்தலத்துக்கு
இவை எதற்கும் என்று - இவை பொருந்தும் என்று
அழகிய - அழகியவையான
ஐம்படையும் - பஞ்சாயுதங்களையும்

விளக்க உரை

உரை:1

சிறு குழந்தைகளுக்கு அனுக்கம் வராமலிருப்பதற்காக எம்பெருமானுடைய பஞ்சாயுதங்களை யமைத்துக் கழுத்திலணியும்படி ஓராபரணஞ் செய்து அணிய செய்வது வழக்கம். அவ்வாபரணமே இங்கு ஐம்படை என்கிறது. அதனைக் குபேரன் கொணர்ந்து ஸமர்ப்பித்து அதோ நின்கின்றார்காண் என்று சொல்லித் தாலாட்டுகிறள். ‘திருமாற்பிற்கு’, ‘திருமார்வுக்கு’ என்பன பாடபேதங்கள். ஹாரமென்ற வடசொல் ஆரமெனத் திரிந்தது. வழிவில் கொடையான் - அரைகுறையாகக் கொடுப்பது, அஹங்காரத்தோடு கொடுப்பது, கைம்மாறு கருதிக்கொடுப்பது, கேட்டபின்பு கொடுப்பது, புகழை விரும்பிக் கொடுப்பது ஆகிய இவையெல்லாம் தானத்திற்குக் குற்றங்கள்; அவ்வகைக் குற்றமொன்றும் இல்லாதபடி கொடுப்பவனும் குபேரன். ‘வயிச்சி ராவணன்’ என்று நீட்டியோதும் பாடம் இடையில் வந்ததாகையாலும் பொருத்தம் அற்றதாகையாலும் மறுக்கத்தக்கது. இதன் வியாக்கியானத்தில் ‘அரவை அரா என்னுமாபோலே வைச் ரவணன் என்கிறதை வயிச்சிராவணன் என்கிறது’ என்று காணப்படுகின்ற வாக்கியமும் இலக்கண மறியாதவர்களால் ஓலைப்புத்தகங்களில் ஓரத்தில் குறிப்பாக எழுதி வைக்கப்பட்டிருந்தது. பிறகு அச்சுப் பதிப்பிலும் சேர்த்துக் கொள்ளப்பட்டு விட்டதென்றும் பொருட் பொருத்தமற்றதென்றும் அழகியமணவாளச்சீயர் பலகாலுமருளிச் செய்யக் கேட்டிருக்கை. ‘வைச் ரவணன்’ என்ற வட சொல் வயிஸ்ரீஅவணனென விகாரப்பட்டது. ப்ரஹ்மபுத்ரனான புலஸ்த்யப்ரஜாபதியினுடைய புத்திரனாகிய விச் ரவ முனிவனுக்கு பரத்வாஜ புத்திரினியிடம் பிறந்தவனான குபேரனைச் சொல்லுகிறது.

உரை:2

வடிவான உன் மார்புக்கு ஏற்றவை என்று அழகிய ஐந்தாயுதத்தை (பெருமாளின் அடையாளங்களான சங்கு, எஃகம், வாள், தண்டு, வில் ஆகியவையே ஐந்தாயுதம்) அருமையான சங்கிலியில் கோர்த்துக் கொணர்ந்த குற்றமற்ற கொடையாளனான குபேரன் உன்னைத் தொழுது உன் அருகிலேயே நிற்கின்றான் தூய மணியின் நிறங்கொண்டவனே கண்ணுறங்கு.

English Translation

The generous Vasiravana, Lord of the Northern Quarter stands betwixt with folded hands, offering a necklace of charms shaped like Vishnu’s five weapons,--conch, discus, dagger, mace and bow,--befitting your radiant chest, Talelo. O, Faultless gem-hued Lord, Talelo.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்