விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பறவையேறு பரமபுருடா!*  நீஎன்னைக் கைக்கொண்டபின்* 
    பிறவியென்னும் கடலும்வற்றிப்*  பெரும்பதம் ஆகின்றதால்* 
    இறவு செய்யும் பாவக்காடு*  தீக்கொளீஇவேகின்றதால்* 
    அறிவையென்னும் அமுதவாறு*  தலைப்பற்றி வாய்க்கொண்டதே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பறவை ஏறு - பெரிய திரவடிமேல் எறுமவனான
பரம்புருடா - புருஷோத்தமனே!
நீ - (ஸர்வரக்ஷகனான) நீ
என்னை - (வேறு கதியற்ற) என்னை
கைக்கொண்ட பின் - ஆட்படுத்திக்கொண்ட பிறகு

விளக்க உரை

“இனியென் திருக்குறிப்பே” என்று எனக்குச் செய்யவேண்டுவதெல்லாம் செய்து தலைக்கட்டியான பின்பு இனிப்பதறுவானென்? என்றுகேட்ட ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், “ஆழ்வீர்! நீர் எல்லாம் பெற்றீரோ? உம்மை நெடுநாளாகப் பற்றிக்கிடக்கிற கருமங்கள் கிடக்கின்றவே; ப்ராப்திக்கு உறுப்பான பரமபக்தி பிறக்கவில்லையே” என்ன; இவையித்தனையும் தமக்குப் பிறந்தபடியை அருளிச்செய்கிறார் - நீ பொருளல்லாத வெள்ளைப் பொருளாக்கின பிறகு ஸம்ஸாரஸாகரமானது நிச்சேஷமாக வற்றிப்போனமையால், அடியோர் பெருத்தபாக்கியம் பண்ணினேனாகிறேன்; இந்த ஸம்ஸாரத்துக்கு மூலமான பாபராசிகளும் தீயினிற்பட்ட தூசுபோல இவையெல்லாம் இங்ஙனொழிந்தமையால் ஞானம் குறைவற்ற வளரப்பெற்றது என்றவாறு. எம்பெருமான் ஆழ்வாரைத் திருநாட்டுக்கு எழுந்தருளப் பண்ணிக்கொண்டு போவதாகப் பெரிய திருவடியின் மேலேறிக்கொண்டு வந்து தோன்றினனாதலால் “பறவையேறு பாம்புருடா” என விளிக்கின்றார். ‘பெரும்பதமாகின்றது’ என்பதற்கு முன், எனக்கு என வருவிக்கவேணும்; பெரிய பதவியை யான் பெறாநின்றேன் என்றபடி. இன்றளவும் பிறவிக்கடலில் ஆழங்காற்பட்டுக் கிடந்தமையால் நிஹீநபதவியிலிருந்த நான், இன்று அதனை வென்றமையால் உத்தமபதவியைச் சேர்ந்தேன் எனவிரிக்க.

English Translation

O Lord who rides the Garuda bird. After you took me took me into your service the ocean of rebirth has dried up and become sanctified space. The death-trap thickets of karma are burning in a raging fire. Knowledge is flowing like a river of ambrosia, flooding the head and above.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்