விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொங்கைச் சிறுவரைஎன்னும்*  பொதும்பினில் வீழ்ந்துவழுக்கி* 
    அங்குஓர் முழையினில்புக்கிட்டு*  அழுந்திக் கிடந்துஉழல்வேனை*
    வங்கக் கடல்வண்ணன் அம்மான்*  வல்வினைஆயின மாற்றி* 
    பங்கப்படாவண்ணம் செய்தான்*  பண்டுஅன்றுபட்டினம்காப்பே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சிறு வரை - சிறிய  மலைபோன்ற
கொங்கை என்னும - முலைகளாகிற
பொதும்பினில் - பொந்தில்
வழுக்கி வீழ்ந்து - வழுக்கி விழுந்து
வல்வினை ஆயின - தீவினைகளாயிருப்பவைகளை

விளக்க உரை

“வாணிலாமுறுவல் சிறுநூதல் பெருந்தோள் மாதாரர் வனமுலைப்பயனே பேணினேன்” என்றபடி விஷயாந்தரங்களில் ஆழங்காற்படுத்திப் பின்பு அதற்குப் பலாமக நகரங்களிலுங் கொண்டுபோய் அழுத்தக் கடவனவான எனது கருமங்களையெல்லாம் எம்பெருமான் ஒழித்தருளி, பரிபவங்களுக்கு ஆளாகாதபடி செய்தருளிப் பாதுகாத்தருளினனென்கிறார். மலைபோற் கிளர்ந்துள்ள கொம்மைமுலையைப் ‘பொதும்பு’ (பொந்து) என்னலாமோ? எனின்; தன்னிடத்து அழங்காற் படுத்திக்கொள்ளுந் தன்மையின் ஒற்றுமைபற்றி அங்ஙனங் கூறினரென்க. இனி, “கொங்கைச் சிறுவரை யென்றும்” என்று பாடமாகிய, “சிறுவரை” என்பதை, சிறு அரை எனப் பிரித்து, ‘கொங்கை என்றும், சிறு அரை என்றும்’ என இயைத்து, இதொரு முலையிருந்தபடியே! என்றும், இதொரு சிற்றிடையிருந்தபடியே! என்றும் (மயங்கிச்)சொல்லிக்கொண்டு (விஷயாந்தரத்தில் மூண்டு) ஹேயஸ்தாநமாகிய பொந்தில் விழுக்கி வீழ்ந்து எனப் பொருள் கொள்ளலாமென்பர். முழை என்று குஹைக்குப் பெயர்; அதுபோல் பயங்கரமான நரகத்தைச் சொல்லுகிறது இங்கு. உழல்வேனை- எதிர்காலம்; நிகழ்காலமன்று. இவ்விடத்தில் இப்போது கொங்கைச் சிறுவரை யென்னும் பொதும்பினில் வழுக்கி வீழ்கிறதற்குப் பலனாக, பின்பு நரகத்திற்புகுந்து அங்கு உழலப்போகிற என்னுடைய என்றவாறு (“வங்கக்கடல்வண்ணன்” தன் திருமேனியினழகை எனக்குக் காட்டியருளின மாத்திரத்தினால் ஊழ்வினைகளெல்லாம் தன்னுடையே ஒழிந்தன என்பது உள்ளுறை. பங்கப்படாவண்ணம்- தென்னவன்தமர் செப்பமிலாதார் சேவதக்குவார் போலப்புகுந்து, பின்னும் வன்கயிற்றாற் பிணித்தெற்றிப் பின்முன்னாக விழுக்கை முதலிய பரிபவச் செயல்களுக்குப் பாத்திரமாகாதபடி என்கை.

English Translation

I slipped between two mountain-like bosoms and fell into an abyss, then floundered helplessly in a dark cave. The ocean-hued Lord my master came and saved me, ridding me of my karmas. No more like old, the fortress is on guard!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்