விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண்ணா! நான்முகனைப் படைத்தானே!*  காரணா! கரியாய்! அடியேன் நான்* 
    உண்ணா நாள் பசி ஆவது ஒன்று இல்லை*  ஓவாதே நமோ நாரணா என்று*
    எண்ணா நாளும் இருக்கு எசுச் சாம*  வேத நாள்மலர் கொண்டு உன பாதம்- 
    நண்ணாநாள்! அவை தத்துறுமாகில்*  அன்று எனக்கு அவை பட்டினி நாளே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உண்ணா நாள் - உண்ணாதொழிந்தபோது
பசிஆவ தொன்றுமில்லை - பசி என்பது மறைத்துமுண்டாவதில்லை.
ஓயாதே - இடைவிடாமல்
நமோ நாராயணா என்று - நமோ நாராயணாய’ என்று
எண்ணா நாளும் - அநுஸந்திக்கப்பெறாதநாளும்

விளக்க உரை

தராகபோஷநங்களெல்லாம் எம்பெருமான் திருவடிகளே” என்று கீழ் அருளிச்செய்ததை இப்பாட்டில் விசதமாக்கி நிகமித்தருளுகிறார். இவ்வுலகத்திலுள்ளாரனைவரும் ஒருபொழுது உண்ணாதொழிந்தால், பசியினால் மிகவும் தளர்ந்து வருந்துவார்கள்; அடியேனுடைய இயல்பு அங்ஙனெத்ததன்று; திருமந்திரத்தை அநுஸந்திக்கப் பெறாதநாளும், தொழுது முப்போது முன்னடிவணங்கித் தக்ஷமலர் தூய்த்தொழுது ஏத்தப்பெறாத நாளுமே அடியேனுக்கு உண்ணாநாள்; இவ்விரண்டும் அடியேனுக்கு வாய்க்கப்பெற்ற நாள் உண்டநாள், அப்படி நிரப்பாதநாள் பட்டினிநாள்’ என்கிற வயஸஸ்தை என்னிடத்தில்லை; நான் வயிறார உண்டபோதிலும், திருமந்ராதுஸந்தாகமும் ஸ்ரீபாதஸேவையும் தட்டுப்பட்டதாகில், அந்நாள் எனக்குப் பட்டினிநாளே என்றவாறு. இருக்கேசுச் சாமவேதம் - ***- மென்ற வடமொழித்தொடரின் விகாரம். தத்துறதல்- வாய்க்கப்பெறா தொழிதல் ... (கூ)

English Translation

My Lord Krishna! Creator of Brahma! O First-cause, Dark Lord! This bonded serf has never starved for want of food even one day. If ever there comes a day when I do not contemplate on the Mantra-flowers culled from the Rig, Yajus and Sama Vedas that indeed will be a day of starvation for me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்