விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செஞ்சொல்மறைப் பொருளாகி நின்ற*  தேவர்கள்நாயகனே! எம்மானே!* 
    எஞ்சலில் என்னுடை இன்னமுதே!*  ஏழலகுமுடையாய்! என்னப்பா!*
    வஞ்சவுருவின் நமன்தமர்கள்*  வலிந்துநலிந்து என்னைப்பற்றும்போது* 
    அஞ்சலமென்று என்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செம் சொல் - ருஜுவான சொற்களையுடைய
மறை - வேதத்துக்கு
பொருள் ஆகி நின்ற - அர்த்தமாயிருப்பவனும்
தேவர்கள் - நித்திய ஸூரிகளுக்கு
நாயகனே - தலைவனுமானவனே!

விளக்க உரை

அமுதத்திற்கு எஞ்சலில்லாமையாவது- ‘அப்பொழுதைக்கப் பொழுதென்னாராவமுதமே” என்றபடி அநுபவிக்க அநுபவிக்க குறைவின்றிப் பணைக்கை, வஞ்சவுருவின் நமன்றமர்கள் தங்கள் வரவு ஒருவற்குத் தெரியாதபடி ரூபத்தை மறைத்துக்கொண்டு வரும் யமபடர்கள் என்றபடி, வஞ்சம்- அஞ்சல்- அஞ்சு என்ற வினைப்பகுதியாப் பிறந்த எதிர்மறை பொருமை யேவல்ல; அம்- சாரியை.

English Translation

O Lord of Srirangam reclining on a serpent bed! O Lord of gods, my liege! O substance of the Vedas, my undefiled ambrosial delight! Lord of the seven worlds, my Father! When Yama’s agents in terrible forms and hordes seize and torture me, protect me, you must, and say “Fear not!”

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்