விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எல்லையில் வாசல் குறுகச்சென்றால்*  எற்றிநமன்தமர் பற்றும்போது* 
    நில்லுமின் என்னும் உபாயமில்லை*  நேமியும் சங்கமும் ஏந்தினானே!
    சொல்லலாம் போதே உன் நாமமெல்லாம்*  சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டுஎன்றும்* 
    அல்லல்படாவண்ணம் காக்கவேண்டும்*  அரங்கத்து அரவணைப் பள்ளியானே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நேமியும் - திருவாழியையும்
சங்கமும் - ஸ்ரீபாஞ்சஜந்யத்தையும்
ஏந்தினானே - கையில் அணிந்து கொண்டுள்ளவனே
வாசல் குறுகச் சென்றால் - (யமபுரத்துக்குப்) போம் பழியைக் கிட்டப் புகுந்தால்
நமன் தமா - யமகிங்காரர்கள்

விளக்க உரை

எல்லை என்று - மரணதசையைச் சொல்லுகிறது; ஆயுஸ்ஸுக்கு மரணம் எல்லையாதலால். வாசல் -‘வாயில்’ என்பதன் மரூஉ. எற்றுதல் - அடித்தல். உபாயம்- வடசொல்; ஸாதகம் என்பது பொருள். “நில்லுமினென்னவுபாயமில்லை” என்று சிலர் ஓதுவர். எம்பெருமானே! நான் சரமதசையில் கர்மபலாநுபவத்துக்காக யமபுரதின்வழியே சென்றால் அங்க யமகிங்கரர்கள் வந்து என்னை அடித்துப் பிடிக்கும்போது, “நீங்கள் என்னருகில் வரக்கூடாது” என்று அவர்களைத் தடுக்க என்னால் முடியாது: ஆதலால், அப்படிப்பட் அநர்த்தம் அடியேனுக்கு விளையவொண்ணாமைக்கு உறுப்பாக இப்போதே உன் திருநாமங்களையெல்லாம் அநுஸந்தித்துவிட்டேன்; இதுவே ஹேதுவாக என்னை நீ திருவுற்றதிற்கொண்டு காத்தருளவேணுமென்றவாறு

English Translation

O Lord of Srirangam reclining on a serpent bed! Pray bear me in mind always and protect me from miseries. O Lord of conch and discus, I prate you names here and now, when I can, for when the gates of the nether world approach and Yama’s agents kick and grab me, I will have no power to say “Hold”!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்