விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குறட்பிரமசாரியாய்*  மாவலியைக் குறும்பதக்கி அரசுவாங்கி* 
    இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை*  கொடுத்துகந்த எம்மான்கோயில்* 
    எறிப்புடைய மணிவரைமேல்*  இளஞாயிறு எழுந்தாற்போல் அரவணையின் வாய்* 
    சிறப்புடைய பணங்கள் மிசைச் செழுமணிகள் விட்டெறிக்கும் திருவரங்கமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எறிப்பு உடைய - மிக்க ஒளியையுடைய
மணி வரை மேல் - நீலரத்ந பர்வதத்தின்மேல்
இள ஞாயிறு - காலஸூரியர்கள்
எழுந்தால் போல் - உதித்தாற்போல
அறவு அணை பின் வாய் - திருவனந்தாழ்வானிடத்து

விளக்க உரை

மாவலினிடத்து மூன்றடி வாங்கி இரண்டிகளால் கீழ்மேலு லகங்களனைத்தையு மளந்துகொண்டு, மூன்றாமடிக்கு இடம் கிடைக்காமல் அதனைத் தருமளவும் சிறைவைப்பாரைப்போலே அவனைப் பாதாளத்திற்கிடக்கும்படி தள்ளியவாறு கூறுவன, முன்னடிகள். “கலவிருக்கை கொடுத்து என்றது - அவ்விருப்பு சிறையிருப்பாகவன்றிகே ***- பூமியாகக் கொடுத்த படியைப்பற்ற; கலவிருக்கையாவது- எநஞ்ச கலந்திருக்குமிருப்பிறே” என்ற வியாக்கியவாக்கியமாகி மறியத்தக்கது. பிரமசாரி - ***- . பாதாளம்- வடசொல். * பச்சைமாமலையோல் மேனியனான அழகியமணவாளன் சாய்ந்தருளப் பெறுகையால் அத்திருமேனியினது நிழலீட்டாலே கறுத்துத் தோன்றுகின்ற திருவனந்தாழ்வானுடைய படங்களின்மேல் செழுமணிகள் ஒளிவிடாநிற்பது- ஒரு நீலரத்னபர்வதத்தின்மேல் பல இளஞ்சூரியர்கள் உதித்தாற்போலு மென்பது, பின்னடி: இது இல்பொருளுவமை

English Translation

The Lord went to Mabali as a mendicant manikin, subdued his ego, took his kingdom, and in a trice gave him the nether world to rule. He resides by his own will in the temple of Tiru-Arangam. The hoods of his serpent Ananta shine with radiant gems, like several morning suns raised over a range of bright mountains.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்