விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தன்னடியார் திறத்தகத்துத்*  தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல்* 
    என்னடியார் அதுசெய்யார்*  செய்தாரேல் நன்றுசெய்தார் என்பர்போலும்* 
    மன்னுடைய விபீடணற்கா மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்க்கண்வைத்த* 
    என்னுடைய திருவரங்கற்கன்றியும்*  மற்றோருவர்க்கு ஆளாவரே? (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சிதகு - குற்றங்களை
உரைக்கும் என் - கணக்கிட்டுச் சொல்லத் தொடங்கினாலும்
என் அடியார் - “எனக்கு அடிமைப்பட்டவர்கள்
அது - அக்குற்றங்களை
செய்யார் - செய்யமாட்டார்கள்;

விளக்க உரை

“நீரிலே நெருப்புக்கிளருமாபோலே குளிர்ந்த திருவுள்ளத்தில் அபராதத்தாலே சீற்றம் பிறந்தால் பொறுப்பது இவளுக்காக; திருவடியைப் பொறுப்பிற்குமிவள் தன் சொல்வழி வருமவனைப் பொறுப்பிக்கச் சொல்ல வேண்டாவிற்றே” (முமுக்ஷுப்படி) என்றருளிச் செய்தபடி- சேதநர் செய்த பிழைகளைக் கணக்கிட்டு அதற்கு தக்கவாறு தண்டம் நடத்துவதாகச் சீற்றமுற்றிருக்கு மெம்பெருமானை எதிர்த்து ***= இவ்வுலற் பிழைசெய்தார் ஆர்?” என்றாற்போலப் சில பேச்சுக்களைப் பேசி மயக்கி அக்குற்றவாளிகளை வாழ்விக்க கடவனான பிராட்டிதானே எம்பெருமாளுடைய திருவுள்ளத்தைச் சோதிக்கக் கருதியோ, வேறு ஏதேனுமொரு காரணம் கொண்டோ அப்பகனச்சேஷபூதர்திறத்துச் சில குற்றங்களை எம்பெருமானிடத்துக் கூறுவளோயாகில், அதுகேட்டு எம்பெருமான், “இப்படிப்பட்ட குற்றங்களை உன்னடியார் செய்யத் துணிவர்களேயன்றி என்னடியார் ஒருகாலுஞ் செய்யமாட்டார்கள்” என்பன்; அவ்வளவிலும் பிராட்டியானவள், “நீர் இங்ஙன் சொல்லலாகாது, அவர்கள் குற்றவாளிகள் என்பதில் இறையும் ஐயமில்லை” என்று நிர்ப்பந்தித்துச்சொல்லில், அதற்கு எம்பெருமான் “உன்னடியார் செய்யுங் குற்றங்கள் எனக்குக் குண்மாகவே தோற்றாநின்றன; இனி நீ ஒன்றும் எதிர்த்துப்பேசக் கடவையல்ல” என்று வெட்டொன்று துண்டிரண்டாகக் கூறுவன் என்பது முன்னடிகளிற் போதரும். இதனால், பெருமாள், பிராட்டி, இருவரும் ஒருவருக்கொருவர் போராடி அடியாரைநோக்கியருளுமாறு கூறியதாம். தாமரையாள் - இடமடியாப்பிறந்த பெயர். குற்றத்தையும் நற்றமாகக் கூறவேண்டியவள் சிதகுரைப்பதுபற்றித் “தாமரையாளாகிலும்” என்றார். “என்னடியார் குற்றஞ்செய்யார்கள்” என்று சொல்லவேண்டும் போதும், குற்றம் என்ற சொல்லை எம்பெருமான் வாயாற் சொல்லுதற்குக்கூசி “என்னடியார் அது செய்யார்” என்பனாம்; “பேதை பாலகன் அதாகும்’ என்ற திருமாலையும்,

English Translation

The Lord reclines with his eyes set in the direction of fortified Lanka with concern for the good Vibhishana. Even if the lotus-lady Lakshmi herself were to give adverse reports about his devotees, he seems to say, “My devotees will never do that, and if they did, they did well”. Will anyone choose to serve a master other than my Lord of Tiru-Arangam?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்