விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குன்றாடு கொழுமுகில்போல்*  குவளைகள்போல் குரைகடல்போல்* 
    நின்றாடு கணமயில்போல்*  நிறமுடைய நெடுமாலூர்* 
    குன்றாடு பொழில்நுழைந்து*  கொடியிடையார் முலையணவி* 
    மன்றாடு தென்றலுமாம்*  மதிளரங்கம் என்பதுவே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குன்று ஆடு - மலையினுச்சியிற்சார்ந்த
கொழுமுகில் போல் - நீர் நிறைந்த மேகம் போலவும்
குவளைகள் போல் - கருநெய்தல் பூப்போலவும்
குரை - ஒலிசெய்யாநின்ற
கடல்போல் - கடல்போலவும்

விளக்க உரை

நிறம் என்று திருமேனிநிறத்தன்னையே சொல்லிற்றாக்க் கொள்ளில் கண்ட கண் மயிர்க்குச்சி விடும்படியான குளிர்த்திக்கு – நீர்கொண்டெழுந்த காளமேகத்தின் நிறத்தையும், நெய்ப்புக்கு – குவளைப்பூவின் நிறத்தையும், இருட்சிக்கு – கடலின் நிறத்தையும், புசர்ப்புக்கு – மயில் கழுத்தின் நிறத்தையும் உவமைகூறுவதாக நிறமித்துக்கொள்ள வேணும். எம்பெருமான் வடிவுக்கு ஒன்றே உபமாநமாகப் பேராமை இதனால் அத்யத்தக்கது.

English Translation

The breeze blows through the hilly groves, then gently over the breasts of thin-waisted dames, and wanders through the four streets of walled Tiru-Arangam. It is the abode of our Lord of dark laden-cloud hue, dark water-lily-hue, dark deep-ocean hue, and dark dancing peacock hue.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்