விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வல்யிற்றுக் கேழலுமாய்*  வாளேயிற்றுச் சீயமுமாய்* 
    எல்லையில்லாத் தரணியையும்* அவுணனையும் இடந்தானுர்*
    எல்லியம்போது இருஞ்சிறைவண்டு*  எம்பெருமான் குணம்பாடி* 
    மல்லிகை வெண்சங்கூதும்*  மதிளரங்கம் என்பதுவே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இரு சிறை வண்டு - பெரிய சிறகுகளையுடைய வண்டுகளானவை
எல்லியம்போது - அந்திப்பொழுதிலே
எம்பெருமான் குணம்பாடி - பெரிய பெருமாளுடைய திருக்குணங்களைப் பாடிக்கொண்டு
மல்லிகை வெண்சங்கு ஊதும் - மல்லிகைப்பூவாகிற வெளுத்த சங்கை ஊதாநிற்கப்பெற்றதும்
மதில் - திருமதிள்களையுடையதுமான

விளக்க உரை

ஹிரண்யாக்ஷரணையும், ஹிரண்யனையும் ஸம்ஹரித்தபடியைக் கூறுவன முன்னடிகள். வல்லெயிற்றுத் தரணியை இடந்தான், வாளெயிற்றுச் சீயமாய் அவுணனை இடந்தான் என இயையும்; எனவே, நிரனிறைப் பொருள்கோளாம். இவ்வரலாறுகள் கீழ்ப்பலவிடங்களிலும் குறிக்கப்பட்டுள்ளன. வராஹத்தின் எயிற்றுக்குப் பூமியை கீண்டெடுக்கும்படியான வன்மை இன்றியமையாதானது பற்றி “வல்லெயிற்றுக் கேழல்” என்றார்; நரஸிம்ஹத்தின் எயிறுகள் அழகுக்குறுப்பாதல் பற்றி “வாளெயிற்றாச்சீயம்” என்றார். தரணிக்கு எல்லையில்லாமையானது கடல்களும் தீவுகளும் போலன்றி, எல்லாம் தன்னுள்ளேயாம்படி *பஞ்சாகத்கோடி விஸ்தீர்ணையாயிருக்கை அவுணனுக்கு எல்லை யில்லாமையாவது நான் பெற்ற வரங்களுக்கீடாக எல்லையில்லாத தபஸ்ஸுகளை யுடையவனாயிருக்கை. வண்டுகள் அந்நியம்போதில் எம்பெருமான் குணங்களைப் பாடிக்கொண்டு திரிதலைக் கூறுவது, மூன்றாமடி. கீழ் திருமாலிருஞ் சோலையைப் பாடும்போது “அறுகால் வரிவண்டுகள் ஆயிரநாமஞ்சொல்லிச், சிறுகாலைப்பாடும்” என்றார்; இங்கு ‘எல்லியம்போது’ என்கிறார்; இதனால், திவ்யதேசங்களிலுள்ள வண்டுகள் காலத்துக்கேற்பப் பிகளிலே பகவத்குணங்களை நியதமாகப் பாடும்படியைக் கூறியவாறு. (மல்லிகை இத்யாதி.) ஸாயங்கால புஷ்பமான மல்லிகைப் பூவில் வண்டுகளிலிருந்து ஊதும்போது அந்தப்பூவானது அலருவதுக்கு முன்பு தலைகுவிந்து மேல்பருத்துக் காம்படிநேர்ந்து வெளுத்த நிறத்தையுடைத்தாய் சங்கைப் போன்றிருத்தலால் வெண்சங்கை ஊதுவது போல்வது பற்றி இங்ஙனருளிச் செய்தாரென்க.

English Translation

Two-winged beetles at dusk sing the Lord’s praise and blow the white Jasmine conch in the walled city of Tiru-Arangam. It is the abode of our master who came once as a boar with strong tusks and again as a lion with white feline teeth, then lifted the wide Earth and Hiranya Kasipu with equal ease

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்