விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மண்ணும் மலையும்*  கடலும் உலகு ஏழும்* 
    உண்ணுந் திறத்து*  மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு*
    வண்ணம் எழில்கொள்*  மகரக்குழை இவை* 
    திண்ணம் இருந்தவா காணீரே* 
     சேயிழையீர்! வந்து காணீரே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மண்ணும் - பூமியையும்;
மலையும் - மலைகளையும்;
கடலும் - கடல்களையும்;
உலகு எழும் - ஸப்தலோகங்களையும்;
உண்ணுந்திறந்து - திருவயிற்றிலே வைக்கிறவளவில்;

விளக்க உரை

இவ்வுலகில் இருக்கும் அனைத்தையும் தாங்கும் பூமியையும், அந்த பூமிக்கு ஆதாரமாக இருக்கும் மலைகளையும், அந்த பூமியைச் சூழ்ந்து காக்கும் கடல்களையும், மற்றும் இருக்கும் ஏழு உலகங்களையும், பிரளய காலத்தில் அழிந்து போகாத படி காப்பதற்குக் கண்ணன் அவற்றை உண்டு தன் வயிற்றில் வைத்துக் கொள்கிறான். அப்படி அவற்றைக் காப்பாற்றும் வாய்ப்பு கிடைக்கிறதே என்பதில் அவனுக்கு மிகவும் மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி தோன்ற அவற்றை உண்கிறான். 
 
அப்படிப்பட்ட கண்ணனின் பெருமை தோன்றும் வகையில் அழகிய திருநிறம் கொண்ட மகரக் குழைகளின் திண்மையைக் காணுங்கள்; ஏழுலகும் உண்டவனின் திண்மைக்கேற்ற திண்மை இந்தக் குழைகளுக்கு இருக்கிறது. சிறந்த அணிகலன்களைப் பூண்ட பெண்களே! உங்கள் அணிகளைக் காட்டிலும் திண்மை உடையவை இந்த மகரக் குழைகள்.

English Translation

O jeweled ladies, come here and see the well-made Makara-like golden ear rings of this child. During Pralaya he gorges himself joyously with the seven worlds, the seven lands, the seven mountains and see seven oceans.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்