விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சரணம் அடைந்த தருமனுக்கா*  பண்டு நூற்றுவரை- 
    மரணம் அடைவித்த மாயவன் தன்னை*  வணங்கவைத்த-
    கரணம் இவை உமக்கன்று என்றி இராமாநுசன்*  உயிர்கட்கு- 
    அரண் அங்கு அமைத்திலனேல்,*  அரணார் மற்று இவ்வாருயிர்க்கே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உமக்கு அன்று - உங்களுக்கு உரிமைப் பட்டவையல்ல;
என்று - என்று இவ்வாறாக உபதேசித்து;
இராமாநுசன் - எம்பெருமானார்;
உயிர்கட்கு - ஆத்மாக்களுக்கு;
அரன் அமைத்திலன் எல் - ரக்ஷையைக் கற்பித்தில ராகில்;

விளக்க உரை

பெரியபிராட்டி தானே சீதையாக வந்து இராவணனிடம், “இராமனைச் சரணம் அடைவாய்”, என்று கூறியபோதும் இராவணன் மறுத்துவிட்டான். அது போல அன்றி, கண்ணனை முழுவதுமாகத் தர்மன் சரணம் அடைந்தான். இப்படிப்பட்ட தர்மனுக்காக முன்பு ஒரு காலகட்டத்தில், மஹாபாரதப் போரில், கௌரவர்கள் நூறு பேர்களை ஸர்வேச்வரன் அழித்தான். கண்ணனை ஏன் மாயவன் என்றார் – சக்கரம் கொண்டு சூரியனை மறைத்து பகல் பொழுதை இரவாக்கியும், “ஆயுதம் எடுக்க மாட்டேன்” என்ற சபதத்தை மீறி பீஷ்மருக்கு எதிராக ஆயுதம் எடுக்க முற்பட்டதையும், அர்ஜுனனை முன்னே நிறுத்தி உபதேசம் செய்ததையும், தனது மேன்மைகள் எதனையும் பாராமல் அர்ஜுனனுக்குத் தேர் ஓட்டியதையும், பாண்டவர்களுக்காகத் தூது சென்றதையும் காணும்போது மாயமான செயல்கள் உள்ள கண்ணனை, “மாயவன்” என்றும் கூறலாம் அல்லவா? இப்படிப்பட்ட அந்தச் ஸர்வேச்வரன் தன்னைச் சரணம் புகவேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த உடலையும் உறுப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தான்; இந்த உறுப்புகள் உங்களுக்காக (நமக்காக) ஸம்ஸாரத்தில் ஈடுபடுவதற்காக அல்ல, கைங்கர்யம் செய்வதற்கே – என்று எம்பெருமானார் உபதேசித்தார். இவ்விதமாக எம்பெருமானார் இந்த உலகில் உள்ள ஜீவன்களுக்கு பாதுகாப்பான வழியை உபதேசித்தார். ஆகவே எம்பெருமானாரைக் காட்டிலும் நமக்குப் பாதுகாப்பு வேறு யார் உள்ளனர்.

English Translation

The wonder-Lord caused victory over the hundred for Dharmaputra who took refuge in him. Ramanuja taught us that these limb are not for personal use but for service to the lord. But for him, who would have provided refuge to these suffering souls?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்