விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு*  என்றும் மறையவர்தம்- 
    தாழ்வற்றது*  தவம் தாரணி பெற்றது*  தத்துவநூல்-
    கூழற்றது குற்றம் எல்லாம் பதித்த குணத்தினர்க்கு*  அந்- 
    நாழற்றது,*  நம் இராமாநுசன் தந்த ஞானத்திலே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மறையவர் தம் தாழ்வு - வைதிகர்களுடைய குறை;
என்றும் அற்றது - இனி ஒருநாளும் இல்லாதபடியாயிற்று;
தாரணி - பூமண்டவமானது;
தவம் பெற்றது - பாக்கியம் பெற்றது;
தத்துவம் நூல் - தத்வபரமான சாஸ்திரங்கள்;

விளக்க உரை

எங்களது எஜமானராக உள்ள எம்பெருமானார், எங்களிடம் எந்தவிதமான கைம்மாறும் எதிர்பார்க்காமல், தனது அளவற்ற கருணை காரணமாக, மிகவும் உயர்ந்த ஞானத்தை எங்களுக்கு அளித்தார். இந்த ஞானம் காரணமாக வேதங்களை அடியுடன் தள்ள முயன்ற பௌத்தர் போன்றவர்களும், வேதவரிகளுக்குத் தவறான பொருள் கற்பிக்க முயன்ற யாதவப்ரகாசர் போன்றவர்களும் தங்கள் வாழ்வை இழந்தனர். இவ்விதம் களைகள் நீக்கப்பட்ட பின்னர், பயிர்கள் தடையின்றி வளர்வது போன்று, நீண்ட காலமாக இருந்து வரும் பரமவைதிகர்கள் தாங்கள் இழந்த வாழ்வை மீண்டும் பெற்று, தங்களது தாழ்வு நீங்கப் பெற்றனர். இதன் மூலம் இந்தப் பூமியானது மிகவும் உயர்ந்த புண்ணியம் பெற்றது. எம்பெருமானாரின் ஸ்ரீபாஷ்யம் போன்ற நூல்கள் மூலமாக வேதங்களில் கூறப்பட்ட பரம்பொருள் குறித்த ஐயம் அனைத்தும் நீங்கிவிட்டன. தாழ்வான குணங்கள் கொண்டிருந்தவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெற்றன.

English Translation

By the Knowledge imparted by Ramanuja, the contradictions of the Upanishads have been resolved, the lives of the polemics have ended, the Vedic seers have become elevated, the world has received much good, the twin karmas of faulty lives have been destroyed.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்